Home /News /sports /

IPL 2021 Champion CSK| கிரேட் கேப்டன்சி... ஹேட்ஸ் ஆஃப் தோனி! - கொல்கத்தாவை அடக்கியது எப்படி?

IPL 2021 Champion CSK| கிரேட் கேப்டன்சி... ஹேட்ஸ் ஆஃப் தோனி! - கொல்கத்தாவை அடக்கியது எப்படி?

தோனியின் அபார கேப்டன்சி.

தோனியின் அபார கேப்டன்சி.

கடந்த முறை யுஏஇயில் நடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போன தோனி படை சிஎஸ்கே, இந்த முறை அதன் கறையை அகற்றி கோப்பையைத் தட்டிச் சென்றது என்றால் அதற்கு முழு காரணம் தோனியின் பிரில்லியன்ட் கேப்டன்சிதான்.

மேலும் படிக்கவும் ...
கடந்த முறை யுஏஇயில் நடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போன தோனி படை சிஎஸ்கே, இந்த முறை அதன் கறையை அகற்றி கோப்பையைத் தட்டிச் சென்றது என்றால் அதற்கு முழு காரணம் தோனியின் பிரில்லியன்ட் கேப்டன்சி மற்றும் வீரர்களை தட்டிக்கொடுத்துச் செல்லும் பழக்கம், அழுத்தத்தை அவர்கள் மீது ஏற்றாத ஒரு கூல் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதுவும் கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாவொட்டாலும் மீதமிருந்த போட்டிகளில் இளம் வீரர் ருதுராஜுக்கு வாய்ப்பளித்து அவரை இன்று ஒரு பெரிய வீரராக உருவாக்கியுள்ளார் தோனி. கிங் மேக்கர் என்றால் இதுதான், அப்போது மீதமிருந்த போட்டிகளை ஒரு அனுபவமாகப் பார்த்து நேர்மையாக ஆடினார் தோனி, அதுதான் தனக்கு கைக்கொடுத்ததாகவும் மீண்டு வலுவாக வந்ததற்குக் காரணம் என்று ஏற்கெனவே தோனி கூறினார்.

ஆனால் நேற்று ஐபிஎல் பைனலில் கொல்கத்தாவை அவர் மடக்கிய விதம் கேப்டன்சியின் ஒரு பிரில்லியண்ட் ஆன, பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய கேப்டன்சி என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில் அபாயகரமாக ஆடினர், 10 ஓவர்களில் 91/0 என்றால் வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஜடேஜா அடி வங்குகிறார். ஷர்துலும் அடிவாங்கினார், ஹேசில்வுட் முதல் 2 ஓவர்களில் 20 ரன்களுக்கும் மேல் கொடுத்தார். கடைசியில் மிடில் ஓவர்களுக்கென்றே பிராவோவை தோனி வைத்திருந்தார்.

சிஎஸ்கே இன்னிங்சில் தினேஷ் கார்த்திக் டுபிளெசிஸுக்கு ஸ்டம்பிங்கை விட்டார் அது பெரிய விலையைக் கொடுக்கச் செய்து விட்டது. பெர்கூசன் 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மோர்கன் கேப்டன்சியும் மோசம், பேட்டிங்கும் மோசம், பீல்டிங் அதை விடவும் மோசம். விரட்டலில் வெங்கடேஷ் அய்யருக்கு தோனியே ஒரு கேட்சை விட்டார். ஜடேஜாவைக் கொண்டு வந்தார் அய்யர் 2 சிக்சர்களை விளாச அவரும் 2 ஓவர் 20 ரன்கள், ஷுப்மன் கில் ஷாட்டை அம்பதி ராயுடு கேட்ச் எடுத்தார், ஆனால் அது ஸ்பைடர் கேமராவின் ஒயரில் பட்டு வந்ததால் கேட்ச் இல்லை என்றனர், இதனால் தோனி வெறுப்படைந்தார், தலையைத் தலையை ஏமாற்றத்தில் ஆட்டிக்கொண்டிருந்தார்.

டிவைன் பிராவோ 2 ஓவர்களை செம டைட்டாக வீச தோனியின் களவியூகம் அருமையாக இருந்தது, சர்க்கிள் எண்டில் பீல்டரை கவரில் நிறுத்தி ஓவர் பிட்ச் வீசினாலும் அது கைக்குத்தான் சென்றது காரணம் பிராவோ பந்து ஸ்லோவாகச் சென்றது. ஷர்துல் தாக்கூரை மிகச்சரியாகக் கொண்டு வந்தார் தோனி. வெங்கடேஷ் அய்யர் எனும் அபாயன் அவர் பந்தை தூக்கி அடிக்கப் போய் அவுட் ஆனார். பந்தின் தையலை குறுக்காகப் பிடித்து மெதுவாக வீசினார் ஷர்துல் தாக்கூர். ஜடேஜாவின் அந்தக் கேட்ச் சூப்பர்.

மிக முக்கியமான ஓபனிங் கிடைக்க சிஎஸ்கே அணி அதை முழுதும் பயன்படுத்தியது, தோனி விடுவாரா? ரன் ரேட்டும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் அடித்தே ஆக வேண்டும். ஷர்துல் தாக்கூர் மீண்டும் கிராஸ் சீம் பந்து ஒன்றை வீச அது நின்று வர நிதிஷ் ராணா கேட்ச் ஆகி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ஷர்துல் தாக்கூரை சரியான நேரத்தில் கொண்டு வந்த தோனி அதற்கான அருமையான களவியூகத்தை அமைத்திருந்தார். ஒரே ஓவரில் தாக்கூர் இரண்டு விக்கெட்.

அனைத்தையும் விட முக்கியம் சுனில் நரைன் இறங்கிய போது தோனி ஹேசில்வுட்டைக் கொண்டு வந்ததுதான் டாப், ஏனெனில் நரைன் முதல் பந்திலிருந்தெ அடிப்பார், அவுட் ஆனாலும் கவலைப்படாதவர்.. நரைனும் பவுண்டரி அடித்தார், ஆனால் உடனேயே ஆட்டமும் இழந்தார். 91/0-லிருந்து 97/3 என்று ஆகி பிறகு 120/6 என்று முடிந்தது கொல்கத்தா. கொல்கத்தா தடுமாறும்போதே ஜடேஜாவை மீண்டும் கொண்டு வந்தார் தோனி, இவர் ஒரே ஓவரில் கார்த்திக், ஷாகிப் அல் ஹசனை வீழ்த்தினார்.

Also Read: IPL 2021 Final CSK vs KKR Dhoni| ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதி உள்ள அணி கொல்கத்தா தான்: பெருந்தன்மையின் உச்சத்தில் தோனி

உடனே தீபக் சகாரை கொண்டு வந்தார் தோனி ஷுப்மன் கில் அபாரமாக ஆடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்படியாக கேப்டன்சியில் பந்து வீச்சு மாற்றம், அதற்கேற்ப களவியூகம் என்று தோனி மிக அருமையாக கேப்டன்சி செய்தார், கோலி போல் யாரையும் அர்ஜ் செய்யவில்லை, எல்லாவற்றையும் சரியாகச் செய்து விட்டு பேட்ஸ்மெனுக்கு நெருக்கடி கொடுத்து அவர் தவறு செய்யும் வரை பொறுத்திருந்தார் தோனி.. கிரேட் கேப்டன்சி.. ஹேட்ஸ் ஆஃப் தோனி.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, CSK, IPL 2021, MS Dhoni

அடுத்த செய்தி