• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் 2021: ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஐபிஎல் 2021: ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் எமிரேட்சில் தொடங்குவதையடுத்து போட்டிகளை மைதானத்துக்கு நேரில் வந்து காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் எமிரேட்சில் தொடங்குவதையடுத்து போட்டிகளை மைதானத்துக்கு நேரில் வந்து காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    கிட்டத்தட 2019-க்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அதாவது ரோகித் சர்மா, தல தோனி அணிகளுக்கு இடையிலான தீப்பொறி பறக்கும் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் நேரில் வந்து ரசிக்கலாம். இந்தப் போட்டி துபாய் இண்டெர்னேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை நேரில் காண அனுமதிக்கப்பட்டுள்ளதை பிசிசிஐ மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஆனால் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் குறைந்த அளவிலான இருக்கைகளிலேயே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது பார்வையாளர்கள் வருகைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளத்தில் செப்டம்பர் 16 முதல் இனி வரும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ல் கொரொனா வைரஸ் பரவலினால் அமீரகத்துக்கு மாற்றபட்ட ஐபிஎல் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் காலி மைதானத்தில்தான் போட்டிகள் நடைபெற்றன.

    14ம் அத்தியாய ஐபிஎல் போட்டிகள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பினாலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாமல் சென்னை, டெல்லி, மும்பை மைதானங்களில் நடைபெற்றது. ஏனெனில் அணி தொடர்பான வீரர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தொடர் நிறுத்தப்பட்டது. பிறகு யுஏஇயுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஐபிஎல் தொடர் தற்போது குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன் நடைபெறவிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: