பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் திணறும் மும்பை இந்தியன்ஸ்... கேள்விக்குறியாகும் ஹாட்ரிக் கனவு!

பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் திணறும் மும்பை இந்தியன்ஸ்... கேள்விக்குறியாகும் ஹாட்ரிக் கனவு!

ரோகித் சர்மா

முன்னணி வீரர்கள் சொதப்பி வருவது மும்பைக்கு இந்த ஆண்டு கோப்பை கனவுக்கு செக் வைத்துள்ளது.

  • Share this:
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் சாம்பியனுக்கு உரிய ஆட்டத்தை தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை அதில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் பெற்றுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்திற்கு சரிந்துள்ளது. நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் எடுக்க முடிந்தது.

ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கிரண் பொல்லார்ட், குருணால் பாண்டியா என அதிரடியான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நின்றாலும் கடந்த 4 போட்டிகளில் பெரிய அளவிலான ஸ்கோரை மும்பை அணி பெறவில்லை. அதிகபட்சமாக பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 4 போட்டிகளிலும் குறைந்த ஸ்கோரே பதிவு செய்துள்ளது. அந்த அணிக்கு கிடைத்த 2 வெற்றிகளுக்குமே காரணமாக இருந்தது பந்துவீச்சாளர்கள் தான்.

2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் ஆன மும்பை அணி, 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால் கடந்த 2 தொடர்களிலும் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு அந்த அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு, பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அந்த அணி முத்திரை பதித்தது. தற்போது பந்துவீச்சாளர்கள் மட்டுமே மும்பைக்கு கைகொடுக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்


தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்தக் கூடிய குயிண்டன் டி காக் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் தடுமாறிக்கொண்டுள்ளார். ரோகித் சர்மா கடந்த 3 மேட்ச்களிலும் நல்ல தொடக்கத்தை தந்தாலும் கூட அணி வெல்லும் வகையிலான ஒரு பங்களிப்பை அவர் கொடுக்கத் தவறியுள்ளார்.

கடந்த தொடரில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்த இஷான் கிஷான் இந்த ஆண்டு 4 போட்டிகளும் சேர்த்து மொத்தமே 67 ரன்களே எடுத்துள்ளார். கடந்த தொடரில் அவரின் சராசரி 146 ஆக இருந்த நிலையில் தற்போது 94.36% மட்டுமே வைத்துள்ளார். அதிகபட்சமாக அவர் 28 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹாட்ரிக் எடுத்த பின் சம்பள உயர்வு கேட்ட அமித் மிஸ்ரா - சேவாக் வெளியிட்ட ரகசியம்!


 

இந்த ஆண்டு முக்கியமாக மும்பை அணிக்கு மைனஸாக மாறியிருப்பவர்கள் கிரண் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா. மும்பையின் முதுகெலும்பாக விளங்கும் இருவரும் இந்த முறை ஏமாற்றியுள்ளனர். மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் வாண வேடிக்கை காட்டி எதிராளிகளை அச்சப்படுத்தும் இருவருமே தற்போது அடங்கிபோயுள்ளனர். கடந்த ஆண்டு 15 இன்னிங்ஸ்களில் 402 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியாவின் சராசரி 191.42 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அவரின் ரன் எண்ணிக்கை 13, 15 , 7 மற்றும் நேற்றைய போட்டியில் கோல்டன் டக் என பரிதாபமாக மாறியிருக்கிறார்.

சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற அணிகளுடன் 7, 5 மற்றும் 2 என ஒற்றை இலக்கத்தில் எடுத்துள்ளார். 2020 தொடரில் பொல்லார்ட் முதல் 4 போட்டிகளில் 162, 195, 201 மற்றும் 191 என பட்டையை கிளப்பியிருந்தார்.

முன்னணி வீரர்கள் சொதப்பி வருவது மும்பைக்கு இந்த ஆண்டு கோப்பை கனவுக்கு செக் வைத்துள்ளது. பேட்டிங் ஆர்டர்களை மாற்றியமைத்து இப்பிரச்னையை சரி செய்ய தவறும் பட்சத்தில் மும்பை அணிக்கு இந்த ஆண்டு கோப்பை எட்டாக்கனியாக இருக்கும் என்பதே விளையாட்டுத்துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
Published by:Arun
First published: