அமர்க்களமாகும் ஐபிஎல் 2021: இங்கிலாந்து வீரர்களுக்குப் பச்சைக் கொடி

ஐபிஎல்

பங்களாதேஷ் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  பங்களாதேஷ் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டன், இயான் மோர்கன், சாம் கரன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், ஆகிய வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணியுடன் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  செப்டம்பரில் வங்கதேசத்தில் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதையடுத்து பணமழை ஐபிஎல் தொடரில் ஆட இங்கிலாந்து வீரர்களுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

  ஜோஸ் பட்லர்.


  ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குகின்றன.

  ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.

  இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  ஜோஃப்ரா ஆர்சர்


  செப்டம்பர் 19-ம் தேதி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதலுடன் தொடங்கும் 2-ம் கட்ட லீக் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி ஆர்சிபி அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைகிறது.

  இந்த ஐபிஎல் 2021 தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடக்கும் அதே மைதானத்தில்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்க இருப்பதால், அதற்காக தயாரித்துக் கொள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வாரியம் அனுமதி அளித்தது.

  இதுகுறி்த்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “ ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் பங்கேற்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, ஒப்புதலை ஜெய்ஷா பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கின்றன.
  Published by:Muthukumar
  First published: