• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே எப்படி சமாளிக்கப் போகிறது? : ஸ்டார் பேட்ஸ்மென் ஆடுவதில் சந்தேகம்

சிஎஸ்கே எப்படி சமாளிக்கப் போகிறது? : ஸ்டார் பேட்ஸ்மென் ஆடுவதில் சந்தேகம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதற்கிடையே சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான சாம் கரனும் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம் கரன் இன்னும் துபாய்க்கு வந்து சேரவில்லை.

  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரமாதமாக ஆடிவரும் ஸ்டார் பிளேயர் டுபிளெசிஸ் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதை சிஎஸ்கே எப்படி சமாளிக்கப்போகிறது என்பது சவால்தான்.

    டுபிளெசிஸ் 2021 ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் 320 ரன்களை 145 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார், சராசரி 64, அதிகபட்ச ஸ்கோர் 95 நாட் அவுட். ஷிகர் தவான் (380), ராகுல் (331) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் டுபிளெசிஸ் இருக்கிறார், இந்நிலையில் இவர் சில போட்டிகளில் ஆட முடியாமல் போனால் சிஎஸ்கே நிலைமை என்னவாகும், அதிலும் நெட்டில் மட்டும் சிக்சர்களை காட்டி விட்டு ரியல் ஆட்டத்தில் சிங்கிள்களை எடுக்கும் தோனி இதை எப்படி சமாளிப்பார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டுபிளெசிஸ் தற்போது கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டூபிளெசிஸுக்கு சமீபத்தில் தலையில் பந்துபட்டு ஏற்பட்ட காயத்தால் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறினார். இதனால் அவர் சிஎஸ்கே அணிக்கு தொடர்ச்சியாக ஆட முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

    உடல்நிலை குறித்து சிஎஸ்கே அணி வட்டாரங்கள் கூறுகையில் “ டூப்பிளசிஸ் உடல்நிலை குறித்து ஏதும் தெரியாது. அவர் துபாய் வந்தபின் உடல்நிலையை அணி மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அவர் உடற்தகுதியை ஆய்வு செய்தபின் அணியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான சாம் கரனும் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம் கரன் இன்னும் துபாய்க்கு வந்து சேரவில்லை. அவர் இனிவரும் நாட்களில் வந்து சேர்ந்தாலும், அவர் 6 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்துதான் அணியில் சேர முடியும். எனவே இவரும் ஆடுவது கடினம் என்றாகியுள்ளது.

    கரிபீயன் லீக்கில் விளையாடிவரும் சிஎஸ்கே வீரர்கள் டிவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், டூபிளெசிஸ் ஆகிய மூவரும் நாளை துபாய் வந்து சேர்வார்கள் என்று சிஎஸ்கே கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: