எப்படி இருந்தாலும் ஜாதவ் அடிக்க மாட்டார்; பை ஒரு ரன் ஓடுவார் என கிளவ்வை கழற்றிய தோனி

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்வை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் கேலி கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது.

 • Share this:
  கேதார் ஜாதவ்வை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் கேலி கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது. தோனி, கோலி, நேற்று வார்னர், அதற்கு முந்திய நாள் ரிஷப் பந்த் போன்ற பெருந்தலைகள் மட்டையிலிருந்து காற்று வரும்போது இவர்கள் அவர்களை கலாய்ப்பதில்லை.

  பாவம் அப்பாவி கேதார் ஜாதவ் போன்ற விளிம்பு நிலை வீரர்களை கலாய்த்து ரசிகர்கள் தங்களின் சொத்தை நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்துவது நம் சோஷியல் மீடியா பயன்பாட்டாளர்களின் தரநிலை என்ன என்பதை பறைசாற்றுகிறது. நிற்க.

  நேற்று 17.1 ஓவர்களில் 128/2 என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் இருந்தது, அதன் பிறகு கேன் வில்லியம்சன் வெளுத்து வாங்கி 26 ரன்களை விளாச கடைசி 2 பந்துகளில் இவர்கள் கலாய்க்கும் ஜாதவ் ஒரு அப்பர் கட் சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 14 ரன்களை அடிக்க ஸ்கோர் 171 ரன்களை எட்டியது. ஆனால் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன் ரைசர்ஸ் டெல்லி மட்டைப் பிட்சில் 200 ரன்கள் அல்லது குறைந்தது 190 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். கடைசியில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளில் வென்றது வேற கதை

  ஆனால் வார்னர் 55 பந்துகளில் 57 என்று சொதப்ப மணீஷ் பாண்டேவும் இவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 106 ரன்களைத்தான் சேர்க்க முடிந்தது, மாறாக இதே பிட்சில் டுபிளெசிஸ், ருதுராஜ் இணைந்து 129 ரன்களை 13 ஓவர்களில் விளாசினர்.

  இந்நிலையில் கடைசி ஓவரில் கேன் வில்லியம்சனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க கேதார் ஜாதவ் நிச்சயமாக சிங்கிள் எடுப்பார் அல்லது பந்து மட்டையில் சிக்காவிட்டால் விக்கெட் கீப்பர் தோனியிடம் செல்லும் முன் ஒரு பை ரன் ஓடி விட வாய்ப்புள்ளது என்று கேதார் ஜாதவ்வை குறைத்து எடைபோட்டார் தோனி. இதனால் தனது பெரிய கிளவ்வை கழற்றி விட்டு இன்னர் கிளவ்வுடன் கீப் செய்ய முடிவெடுத்தார். ஏனெனில் அப்போதுதான் குவிக் சிங்கிள் எடுத்தாலோ பை ஓடினாலோ பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்ய முடியும் அல்லவா? அதுதான் தோனியின் எண்ணம். சமயோசித சிந்தனை.

  ஆனால் சாம் கரன் ஷார்ட் பிட்ச் பந்தை வீச கேதார்ஜாதவ் அப்பர் கட் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்து பவுண்டரிக்குப் பறந்தது தோனியின் மூக்கு உடைந்தது. இந்த வீடியோ வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

  ஆனால் இது தோனி ஜாதவ்வை குறைத்து எடைபோட்டதல்ல, இதுதான் தோனி ஸ்டைல் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: