• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பேட்டிங்கில் தோனி 8-10 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடிக்கிறார் : கம்பீர் அலசல்

பேட்டிங்கில் தோனி 8-10 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடிக்கிறார் : கம்பீர் அலசல்

தோனி

தோனி

ஐபிஎல் 2021 இந்தியாவில் நடந்த சுற்றுகளில் 2 முறைதான் தோனி டாப் 5 இடங்களில் பேட்டிங்கில் இறங்கினார். சில வேளைகளில் சாம் கரனை தனக்கு முன்னால் அனுப்பி விடுகிறார் தோனி, இதன் காரணம் என்ன என்று கம்பீர் அசைபோடுகிறார்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    தோனி பிஸ்தா பினிஷர் என்பதெல்லாம் போய் விட்டது, வயதாகி விட்டது, சர்வதேச கிரிக்கெட்டின் கடினமான பவுலிங்குகளை எதிர்கொள்ளாமல் ஐபிஎல் அணிகளின் சொத்தை பவுலர்களை ஆடிக்கொண்டே எத்தனை காலம்தான் அவர் பிஸ்தா பினிஷராக வலம் வர முடியும்? தோனி பேட்டிங்கின் பெரிய பிரச்சனையே, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஆடும் போது இருக்கும் பிரச்சனைதான் அது, அதாவது சிங்கிள், 2 ரன்கள் எடுப்பதில் முனைப்பு காட்டி பவுண்டரி பந்துகளை விட்டு விடுவார், அல்லது சிங்கிள், 2 என்று எடுப்பார்.

    இந்தக் கோளாறை அவரிடம் யாரும் தெரிவிக்கவில்லை, சேவாக் போன்ற ஹிட்டர்கள் பந்துக்குரிய சிகிச்சையை அளிப்பார்கள், நாம் பின்னால் அடித்துக் கொள்ளலாம் அதுவரை ஒன்று, இரண்டு எடுத்து விட்டு நினைத்த போது சிக்ஸ் அடிக்கலாம் என்பதற்கு இது என்ன கொல்லைப்புற கிரிக்கெட்டா? நினைத்த போது சிக்சர்களை, பவுண்டரிகளை தோனியினால் அடிக்க முடியவில்லை. அதனால் பவுண்டரி பந்துகளையும் சிங்கிள், 2 ரன்கள் என்று எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கூறும்போது, “எம்.எஸ். தோனி 4 அல்லது 5ம் நிலையில் இறங்க வேண்டிய வீரர்தான். ஆனால் 6 அல்லது 7ம் இடத்தில்தான் இறங்குகிறார், சில வேளைகளில் சாம் கரனை தனக்கு முன்பாக இறக்கி விடுகிறார். காரணம் அவர் அணியில் ஒருவீரராக பங்களிப்பு செய்வதை விடுத்து பயிற்சியாளராக, மெண்ட்டாராக இருக்க விரும்புவதையே காட்டுகிறது.

    கவுதம் கம்பீர்


    Also Read: பும்ரா பந்து வீச்சை இவர் ஒருவர்தான் அடித்து நொறுக்குவார்- கம்பீர் குறிப்பிடும் பேட்ஸ்மேன்

    இப்போதும் கூட தோனி கடைசி சில பந்துகளை தன் அதிரடிக்குப் பயன்படுத்த முடியும், ஆனால் சர்வதேச கிரிக்கெட் ஆடாத அவருக்கு அத்தகைய பேட்டிங் கடினமே. எனவே 8 அல்லது 10 பந்து பிளேயர் ஆகி விட்டார், அந்த நிலையில் அடித்து ஆடலாம் என்று முடிவெடுத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட் ஆடாமல் கடைசியில் அடிப்பதும் கடினம். ஐபிஎல் கடினமான தொடர், மற்ற சிபிஎல் போன்றெல்லாம் கிடையாது. எனவே டாப் ஆர்டர் பயங்கரமாக ஆடவேண்டிய தேவை சிஎஸ்கேவுக்கு உண்டு. ஆனால் அதுவுமே இனி கடினம்தான்” என்கிறார் கம்பீர்.

    மேலும் டுபிளெசிஸ், சாம் கரன் போன்ற வீரர்கள் சில போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் கடந்த முறை எமிரேட்ஸில் சிஎஸ்கே சொதப்பியதாலும் இந்த முறையும் சிஎஸ்கே சவால்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: