• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்

ஐ.பி.எல் 2021 தொடரின் 2-வது லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 7 விக்கெட்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றது.

  • Share this:
    14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி சென்னையை பேட்டிங் செய்ய பணிந்தது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் டூபிளிசிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவரில் ருத்துராஜ் கேய்க்வாட் விக்கெட்டை பறிக்கொடுத்தார். 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது.

    இதனையடுத்து ரெய்னா, மொயின் அலி கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. மொயின் அலி 36 ரன்களில் அவுட்டானார். இந்தபோட்டியில் வின்டேஜ் ரெய்னாவை பார்க்க முடிந்தது. ரெய்னாவிடம் இருந்து அற்புதமான சிக்ஸர்களை பார்க்க முடிந்தது. கடைசியில் சாம் கரன் அதிரடியை காட்ட சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்து அதிரடி காட்டினர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைத்தது. ப்ரித்வி ஷா 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். களத்தில் இருந்த தவான் தொடர்ந்து அதிரடியை காட்டினர். ஷிகர் தவான்  85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ ஆனார். ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து அணியை வெற்றிப்பெற வைத்தார். டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: