ஐபிஎல் 2021: பிடியைத் தளர்த்தாத மும்பை; போராடி வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் 2021: பிடியைத் தளர்த்தாத மும்பை; போராடி வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி அணி

மும்பை அணிக்கு அமித் மிஸ்ரா அடுத்தடுத்து இரண்டு செக் வைத்தார். ரோஹித் , ஹர்திக் பாண்டியா இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் - குவிண்டன் டி காக் இருவரும் மும்பை இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஸ்டாய்னஸ் வீசிய முதல் ஓவரில் 6 ரன்கள் வந்தது. இரண்டாவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் ரோஹித் எல்.பி.டபிள்யூ கண்டத்தில் இருந்து தப்பினார். அஸ்வின் வீசிய இரண்டாவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வந்தது.

    மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் டிகாக் அவுட்டாகி வெளியேறினார். குவிண்டன் டி காக் சேப்பாக்கம் மைதானத்தில் பெரிய ஸ்கோர்களை எடுத்ததில்லை. இன்றும் டி காக் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். அஸ்வின் வீசிய நான்காவது ஓவரில் ரோஹித் ஷர்மா ஒரு சிக்ஸர் பவுண்டரியும் விளாசினார். 5-வது ஓவரில் ரபாடா வீசினார். இந்த ஓவரில் ரோஹித் சிக்ஸர் விளாசினார். பவர் ப்ளே முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது.

    அமித் மிஸ்ரா


    ரோஹித் ஷர்மா - சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர் ஷிப் பில்ட் செய்திருந்தனர். ஆவேஷ் கான் இந்த கூட்டணியை உடைந்தார். அவரது பந்து வீச்சில் சூர்ய குமார் யாதவ் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சூர்யக்குமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார்.

    மும்பை அணிக்கு அமித் மிஸ்ரா அடுத்தடுத்து இரண்டு செக் வைத்தார். ரோஹித் , ஹர்திக் பாண்டியா இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ரோஹித் ஷர்மா 44 ரன்களில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் இல்லாமல் வெளியேறினார். 9 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இஷான் கிஷான் ஒரு பக்கம் போராட பொல்லார்ட் 2 ரன்களிலும், க்ருணல் பாண்ட்யா 1 ரன்னிலும் நடையைக்கட்டினர். இறுதியில் ஜெயந்த் யாதவ் கொஞ்சம் ரன்களை அடித்தார். இதன்காரணமாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

    பொல்லார்ட்


    இதனையடுத்து டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்தப்போட்டியிலும் இளம்வீரர் ப்ரித்வி ஷா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி அமைத்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். ப்வர்ப்ளே முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து ஸ்மித் - தவான் இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். 10-வது ஓவரை வீசிய பொல்லார்ட் 2-வது பந்தில் ஸ்மித்தை அவுட்டாக்கினர். 33 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். இதனையடுத்து லலித் யாதவ் களமிறங்கினார். 1 0 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.  தொடர்ந்து பெரிய ஷாட்டுகளை ஆடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர்.

    15 ஓவரில் தீபக் சஹர் பந்துவீச்சை தவான் அட்டாக் செய்ய முயன்றார். முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய தவான்  45 ரன்கள் எடுத்த நிலையில் க்ருணால் பண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். பண்ட் 7 ரன்களில் ஏமாற்றமளித்தார்.17-வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் க்ருணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து ஹெட்மயர் வந்தார் போட்டி பரபரப்பானது.

    டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்று இருந்தது.  18-வது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். இந்த் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் டெல்லி அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை வீச பும்ரா வந்தார். பும்ரா 2 நோபால்களை வீசியதால் அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது. 20-வது ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் பந்துவீச வந்தார்.  முதல் பந்தில் ஹெட்மயர் பவுண்டரி விளாசி பிரஷ்ரை குறைத்தார். அடுத்த பந்து நோபாலாக வீச ஒரு ரன் வந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Published by:Ramprasath H
    First published: