CSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்

CSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்

CSK vs DC

மும்பையில் நடைபெறும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான அணி அணுபவம் வாய்ந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியை எதிர்த்து விளையாடுகிறது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    டாஸ்க்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி, நாங்களும் முதலில் பந்துவீச தான் நினைத்தோம். கொஞ்சம் பனியாக இருப்பதால் இரண்டாவது பந்துவீச்சு சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் சற்று கலவையான வானிலை இருப்பது சாதகமாக இருக்கும். மொயின் அலி, சாம் கர்ரன், பிராவோ, டூ-பிளெசிஸ் உள்ளிட்ட 4 வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்றார்.

    சி.எஸ்.கே அணி : ருத்துராஜ், டூ-பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பிராவோ, சாம் குர்ரன், சர்துல் தாகூர், தீபக் சாஹர்

    இரு அணிகளும் இதற்கு முன் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
    Published by:Vijay R
    First published: