ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் ஐதராபாத் அணி பலம் வாய்ந்த டெல்லி அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த அணிகள் மோத உள்ள போட்டியில் யாரின் கை ஓங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
டெல்லி அணியை பொறுத்தவரை தொடரின் முதல் பாதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்பியிருந்தாலும் ரிஷப் பந்த்தான் கேப்டனாக தொடர உள்ளார். தவன் மற்றும் பிரித்வி ஷா இணை அணிக்கு சிறப்பான தொடக்கம் தர காத்திருக்கிறது. இதேபோல் மிடில் ஆர்டரில் ஸ்மித், ஸ்ரேயஸ் ஐயர், பந்த், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் என மிடில் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. பந்துவீச்சிலும் அஸ்வின், ஆவேஷ் கான், ரபாடா, அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் என வரிசைகட்டி நிற்பதால் 2-வது பாதியிலும் இந்த அணியின் ஆதிக்கம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் பிளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய டெல்லி அணி உறுதி செய்துவிடும்.
Also Read: PBKS vs RR IPL 2021: 2 ஓவர் 8 ரன்கள், 8 விக்கெட் கையில், தோற்க முடியுமா?- அதுதான் பஞ்சாப்- பிளே ஆஃப் கதவு அடைப்பு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6-ல் தோல்வி ஒரு வெற்றி என புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருக்கிறது. அணியின் லீடிங் ரன் ஸ்கோரரான Bairstow பேர்ஸ்டோ தொடரில் இருந்து விலகியிருப்பது இவர்களுக்கு நிச்சயம் பலவீனம்தான்.
வார்னர், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, சாஹாவைதான் இந்த அணி பேட்டிங்கில் நம்பியுள்ளது. பந்துவீச்சை பொருத்தவரை புவனேஷ்வர் குமார், ரஷித்கான் இவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். முதல் பாதியில் காயம் காரணமாக விலகிய யார்க்கர் மன்னன் நடராஜன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதுவும் ஐதராபாத் அணிக்கு ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
Also Read: PBKS vs RR | யாராலும் நம்ப முடியாத வெற்றி... கடைசி ஓவரில் ட்விஸ்ட் கொடுத்த கார்த்திக் தியாகி
முதல் பாதியில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. இதில் டெல்லி அணிதான் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் 11 ஆட்டங்களிலும் டெல்லி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.