IPL 2021: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: அக்சர் படேலுக்கு கொரோனா பாசிட்டிவ்

IPL 2021: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: அக்சர் படேலுக்கு கொரோனா பாசிட்டிவ்

அக்சர் படேல்

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் வலுவான அணியாகக் கருதப்படும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இடது கை ஸ்பின்னரும் ஆல்ரவுண்டருமான அக்சர் படேலுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் வலுவான அணியாகக் கருதப்படும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இடது கை ஸ்பின்னரும் ஆல்ரவுண்டருமான அக்சர் படேலுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நிதிஷ் ராணாவுக்குப் பிறகு அக்சர்படேலுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மார்ச் 28ம் தேதி அணியுடன் அவர் இணையும் போது ‘நெகெட்டிவ்’ என்று இருந்தது, ஆனால் அதன் பிறகு பாசிட்டிவ் ஆகியுள்ளது. கோவிட் 19-க்கென்றே பிரத்யேகமாக இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் மெடிக்கல் குழு அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    கேப்பிடல்ஸ் அணி தற்போது மும்பையின் பாரம்பரிய பிரபோர்ன் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்து வருகின்றனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 போட்டிகளில் அக்சர் படேல் கலக்கு கலக்கென்று கலக்கினார். டெஸ்ட்டில் 3 போட்டிகளி 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஏற்கெனவே குழி தோண்டிய பிட்சில் மேலும் குழி தோண்டினார். இதற்கு முன்னதாக திலிப் தோஷி என்ற பெங்கால் இடது கை ஸ்பின்னர்தான் அறிமுகத் தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் தான் ஆனால் அவர் தேறி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

    பிசிசிஐ விதிமுறைகளின் படி சந்தேகத்துக்குரிய கோவிட் வீரர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அணியின் மருத்துவர் உடனே பிசிசிஐ தலைமை மருத்துவருக்குத் தெரிவிப்பது அவசியம்.

    உடனே உள்ளூர் மருத்துவ தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு வீரருக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா சோதனை நடத்தப்படுவது அவசியம்.

    மேலும் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாத அல்லது மிதமான அறிகுறிகள் உள்ள வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

    கொரோனா பீடித்த வீரர்களுக்கு மருத்துவச் சேவை புரியும் நபர்கள் கண்ணாடி, முகமறைப்பு ஷீல்ட், கவசம் என்95 மாஸ்க், கையுறைகள், தலை முதல் கால்வரை தடுப்பு உடை இத்யாதிகளுடன் முழு பிபிஇ கிட்கள் சகிதம் இருப்பது அவசியம்.

    ஐபிஎல் போட்டிகள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: