• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 DC vs SRH: ஐபிஎல் 2021-ன் அதிவேக பவுலர்: டாப் 10 அதிவேகப் பந்துகள்-மிரட்டல் வேகம்

IPL 2021 DC vs SRH: ஐபிஎல் 2021-ன் அதிவேக பவுலர்: டாப் 10 அதிவேகப் பந்துகள்-மிரட்டல் வேகம்

மிரட்டல் வேகம் ஆன்ரிச் நார்ட்யே.

மிரட்டல் வேகம் ஆன்ரிச் நார்ட்யே.

ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் தொடரின் அதிவேக பந்துகளை வீசியவர் டெல்லி கேப்பிடஸ் அணிக்கு ஆடும் தென் ஆப்பிரிக்கா அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட்யேதான்.

  • Share this:
    டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணி நேற்று மோதின இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அனாயசமாக சன் ரைசர்ஸ் அணியை ஊதித்தள்ளியது. நேற்று கிரீன் டாப் பிட்சில் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது அவருக்கே குழிபறிப்பாக அமைந்தது. அதுவும் ஆன்ரிச் நார்ட்யே வீசிய முதல் ஓவர் பயங்கரம், இத்தனைக்கும் எதிர்முனையில் நிற்பவர் சாதாரண வீரர் அல்ல, ஜாம்பவான் டேவிட் வார்னர். ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சரிடம் அடிபட்டு புண்பட்டு அவுட் ஆனதையே இன்னும் வார்னர் மறந்திருக்க மாட்டார்.

    இந்த நிலையில் நேற்று ஆன்ரிச் நார்ட்யே முதல் ஓவரைத் தொடங்கி வார்னருக்கு வீசிய போது ‘ப்ளே’ என்று சொன்னவுடன் படபடவென வெள்ளைக் கோடு ஒன்று தெரிவது போல் பந்துகள் செல்ல முதல் ஓவரில் நோர்ட்யே வீசிய வேகம் 148.2 kmph, 145 kmph, 147.5 kmph, 150.8 kmph, 151.2 kmph,147.1 என்று ஸ்பீடா மீட்டரில் காட்டியது. இந்த வேகத்தை ஜாம்பவான் வார்னரே தாங்க முடியாமல் ஷார்ட் பிட்ச் பந்தில் வெளியேறினார், பந்து மட்டையில் எங்கு பட்டு எப்படி ச்சென்றது என்றே தெரியவில்லை வார்னருக்கு.

    ஸ்கொயர் லெக்கில் ஆட நினைத்த பந்து பாயிண்டில் அக்சர் படேல் கையில் எளிதான டாலி கேட்ச் ஆனது எப்படி என்று இன்னமும் வார்னர் யோசித்துக் கொண்டிருப்பார். இப்போது நோர்ட்யே ஐபிஎல் 2021-ல் வீசிய 8 அதிவேகப்பந்துகளையும் வீசிய ஒரே பவுலர் என்ற பெருமையை எட்டியுள்ளார். கிரிக்கெட் பண்டிதர்கள் ஆன்ரிச் நோர்ட்யேவைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

    ஏற்கெனவே பல சர்வதேச அணி வீரர்களுக்கு நார்ட்யே பீதியைக் கொடுத்திருக்கிறார், ஒருமுறை வங்கதேச அணி தென் ஆப்பிரிக்கா சென்ற போது தொடரின் முடிவில் வங்கதேச வீரர்கள் ஆம்புலன்ஸ் விமானத்தில் வராததுதான் குறை, அத்தனை பேரும் ஆன்ர்டி நார்ட்யே வேகத்தில் உடல் காயமடைந்தனர்.

    இந்நிலையில் ஐபிஎல் 2021-ல் டாப் அதிவேக பந்து வீச்சில் 8 இடங்களை நோர்ட்யே பிடித்துள்ளார் . டாப் 10 அதிவேக பந்துகள் வருமாறு:

    ஆன்ரிச் நார்ட்யே: 151.71, 151.37, 150.83, 150.21, 149.97, 149.29, 149.15, 148.76,

    கேகிசோ ரபாடா: 148.73.

    கிறிஸ் ஜோர்டான்: 148.47.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: