IPL 2021 | RCB vs DC | டெல்லி கேப்பிடல்ஸ் தோல்விக்கு ரிஷப் பந்த்தின் மந்தமான பேட்டிங்கே காரணம்: ஆஷிஷ் நெஹ்ரா சாடல்

ரிஷப் பண்ட்

நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்க டெல்லி கேப்டன் ரிஷப் பந்த்தின் மந்தமான பேட்டிங்கே காரணம் என்று ஆஷிஷ் நெஹ்ரா சாடினார்.

  • Share this:
    நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்க டெல்லி கேப்டன் ரிஷப் பந்த்தின் மந்தமான பேட்டிங்கே காரணம் என்று ஆஷிஷ் நெஹ்ரா சாடினார்.

    இரண்டு அதிரடி வீரர்கள், அதுவும் உலகின் சிறந்த அதிரடி வீரர்களான ரிஷப் பந்த், ஹெட்மையர் அரைசதம் அடித்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தனர், ஆனால் ஒரு ரன்னில் டெல்லி தோற்கிறது என்பதை நம்பவா முடிகிறது. ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான உஷ் கண்டுக்காதீங்க மேட்சா இது என்ற சந்தேகம் எழுகிறது.

    அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

    முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் அணி 15வது ஓவரில் 114/4 என்று தடுமாறிக்கொண்டிருந்தது. கடைசியில் பவுலிங் போட ஆளில்லாமல் ஸ்டாய்னிஸிற்கு முதல் ஓவரைக் கொடுக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் 3 சிக்சர்களுடன் 23 ரன்களை விளாசித் தள்ளினார். டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆர்சிபி அணி வெற்றி ஸ்கோரான 171/5-ஐ எட்டியது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் சொதப்ப, பிரிதிவி ஷா 21 ரன்களில் வெளியேற ரிஷப் பந்த் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் டெல்லி தோல்வி அடைந்தது ஆச்சரியமெனில் ஷிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசியும் போதாமல், ஸ்டாய்னிஸ் தான் கொடுத்த 23 ரன்களில் 22 ரன்களை எடுத்துக் கொடுத்தும் டெல்லி அணி 1 ரன் குறைவாக எடுத்து தோல்வி தழுவியது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

    8 ஓவர்கள் ஆடி ரிஷப் பந்த் ஒரு சிக்ஸரைக் கூட அடிக்கவில்லை, அதோடு மட்டுமல்லாமல் இந்தத் தொடரில் சிக்சர் இல்லாமல் இரண்டாவது அரைசதம் அடிக்கிறார் சிக்சருக்குப்புகழ் பெற்ற ரிஷப் பந்த், இது உண்மையா இல்லை இது உஷ் கண்டுக்காதீங்க என்ற தருணமா? ஏனெனில் இம்முறை கோலியின் ஆர்சிபியை எப்படியாவது கப் வாங்க வைக்க வேண்டும் என்று தீவிர முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

    ரிஷப் பந்த் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 58 ரன்கள் எடுத்தார், கடைசி ஓவரில் இடுப்புயர புல்டாஸ் ஒன்று கோலிக்குப் பயந்து நோ-பால் கொடுக்காமல் விடப்பட்டது, ஆனாலும் அந்தப் பந்தை சிக்சருக்குப் பறக்கவிட ரிஷப் பந்த்தால் முடியவில்லை, அதை மட்டும் சிச்கருக்கு அடித்திருந்தால் அடுத்த பவுண்டரி வெற்றி ஷாட்டாக அமைந்திருக்கும், ஆனால் 2 பவுண்டரிகள்தான் அடித்தார் ரிஷப் பந்த். சிராஜ் நன்றாக வீசினார் என்று கூற முடியாது, ஆனால் ரிஷப் பந்த்தினால் அடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:

    மிடில் ஓவர்களில் ரிஷப் பந்த் பேட் செய்த விதம் மந்தமானது அதே போல் டெத் ஓவர்களில் அவர் எடுக்காமல் விட்ட ரன்கள், மட்டையில் ஷாட்கள் சிக்காமல் பறிபோன ரன்கள் மிகவும் மோசம்.

    ஷிம்ரன் ஹெட்மையர் முன்னமேயே ஆட்டமிழந்திருந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியிருக்கும்.

    இலக்கை விரட்டும் போது உத்தி என்னவென்பதை டெல்லி திட்டமிடவேயில்லை, ரிஷப் பந்த், ஹெட்மையர் போன்ற செட் பேட்ஸ்மென்கள் நாட் அவுட்டாகத் திரும்புகின்றனர் ஆனால் டெல்லி அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்துள்ளது.

    இந்த வடிவத்தில் இப்படி நடக்கக் கூடாது.

    இவ்வாறு ஆஷிஷ் நெஹ்ராவும் போட்டியின் முடிவை சந்தேகமாகவே பார்க்கிறார்
    Published by:Muthukumar
    First published: