• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி... கொல்கத்தா வெற்றி பெற எளிய இலக்கு

பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி... கொல்கத்தா வெற்றி பெற எளிய இலக்கு

DC vs KKR

DC vs KKR

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றின் இராண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி உடன் மோதும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது என்றே இருக்கும்.

    சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைய்டுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள்.

    கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. சுழலில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் நெருக்கடி கொடுத்தனர். இவர்களுக்கு இணையாக பெர்குஷன் மற்றும் ஷிவம் மவி வேகத்தில் திணறடித்ததால் கொல்க்தா அணியின் ரன்ரேட் ஆமைவேகத்தில் நகர்ந்தது.

    ஷிகார் தவான் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ப்ரித்திவ் ஷா (18), மார்கஸ் ஸ்டோனிஸ் (18) ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் ரிஷப் பந்த் வந்த வேகத்தில் 6 ரன்கள் மட்டும் அடித்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: