சக வீரருக்காக ரம்ஜான் நோன்பிருக்கும் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன்

ரஷித் கான்| டேவிட் வார்னர்

 • Share this:
  உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரையும் இணைத்து வைத்துள்ளது ஐபிஎல் போட்டி. ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி மே மாதம் இறுதியில் நிறைவடைய இருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவிழா போல் கண்டுகளித்து கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

  சினிமா நடிகர்களின் சிறிய செயல்கள் கூட ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவது போல் ஐபிஎல் காலத்தில் கிரிக்கெட் வீரர்களின் சமூகவலைதள பதிவுகள் ரசிகர்களால் உற்று நோக்கப்படுகின்றன. அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அன்பு நிறைந்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.  இந்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் அதேவேளையில் இஸ்லாமியர்கள் தங்களது 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பிருந்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் ஆப்கன் வீரர் ரஷித் கான் ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருந்து ரமலான் மாத கடமையை நிறைவேற்றி வருகிறார். அவருடன் அதே அணியில் உள்ள முஜிபுர் ரஹ்மான், முகம்மது நபி ஆகியோரும் நோன்பிருக்கும் நிலையில் அவர்களுடன் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

  கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் இருவரும் நோன்பிருந்ததாக ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் டேவிட் வார்னர் கூறுகையில், உண்ணா நோன்பிருந்தது நன்றாக இருந்ததாகவும் ஆனால் பசி, தாகம் ஏற்பட்டதாகவும் நாக்கு வறண்டு போனதாகவும் கூறுகிறார். கேன் வில்லியம்சன் நன்றி என்று கூறுகிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Rashid Khan (@rashid.khan19)


  வெவ்வேறு மொழி, கலாசாரத்தைக் கொண்டிருந்தாலும் சக வீரருக்காக ரம்ஜான் நோன்பு நோற்ற டேவிட் வார்னர், கேன் வில்லியம்சனைப் பார்த்து இதுதான் அன்புசூழ் உலகு என்கின்றனர் இணையவாசிகள்.
  Published by:Sheik Hanifah
  First published: