• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி... புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம்

பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி... புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம்

CSK vs RCB

CSK vs RCB

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 35-வது லீக் போட்டியி சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சார்ஜா மைதானத்தில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக டாஸ் போடுவது 30 நிமிடம் தாமதமானது. சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய வீரர்களே இந்த போட்டியிலும் களமிறங்கினார்கள். ஆர்சிபி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. சச்சின் பேபி மற்றும் கெய்ல் ஜேமிசனுக்கு பதிலாக நவ்தீப் சைனி, டிம் டேவிட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இந்த ஜோடி சிஸ்கே பந்துவீச்சை பறக்கவிட்டனர். கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் சற்று ஆக்ரேஷமாகவே இருந்தது. ஆர்சிபி அணி பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

    பவர் ப்ளேவை அடுத்தும் ஆர்சிபி அதிரடியாக விளையாடினார்கள். கோலி, படிக்கல் இருவரும் அரைசதம் கடந்தனர்.  விராட் கோலி 53 ரன்னிலும், படிக்கல் 70 ரன்னிலும் அவுட்டாகினர். இவர்களை தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் யாரும் அதிரடி காட்ட முடியாததால் ஆர்சிபி ரன்ரேட் குறைந்தது. டி-வில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெவல் 11, டிம் டேவிட் ஒரு ரன் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்களையும், தாகூர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் டூபிளெசிஸ் களமிறங்கினார்கள். நிதனமாக விளையாடிய இவர்கள் சிஎஸ்கே அணிக்கு சிறந்த அடிதளத்தை அமைத்து வைத்தனர். ருதுராஜ் 38 ரன்களிலும், டூ-பிளெசிஸ் 31 ரன்களிலும் அவுட்டாகினர்.

    ஆர்சிபி பவுலர்கள் சிஎஸ்கே விக்கெட்டை விரைந்து வீழ்த்த முடியாத காரணத்தால் சிஎஸ்கே 18.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதில் எட்டியது. இன்றையப் போட்டியின் வெற்றி மூலம் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: