• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • IPL 2021 CSK vs Punjab Kings எல்லாப் பந்தையும் அடிக்க முடிந்த நாள்: தோனி கேப்டன்சிக்கு சவால் அளித்த ராகுல்

IPL 2021 CSK vs Punjab Kings எல்லாப் பந்தையும் அடிக்க முடிந்த நாள்: தோனி கேப்டன்சிக்கு சவால் அளித்த ராகுல்

233% ஸ்ட்ரைக் ரேட்டில் சிக்சர் மன்னன் ஆன கே.எல்.ராகுல்.

233% ஸ்ட்ரைக் ரேட்டில் சிக்சர் மன்னன் ஆன கே.எல்.ராகுல்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான தங்கள் கடைசி ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் தோனிக்கு கடும் குடைச்சலைக் கொடுத்ததோடு, சென்னை பவுலர்களை வீறு வீறென்று வீறிவிட்டார், 42 பந்துகளில் 98, இதில் 7 பவுண்டரி, 8 சிக்சர்கள். இந்த அடி போதுமா இன்னும் வேணுமா ரக ஆட்டம்.

 • Share this:
  இந்தப் போட்டி நடைபெறும் போது 13 ஓவர்களில் சென்னையின் இலக்கை எட்டினால் பஞ்சாப் கிங்ஸுக்கு ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு மிக மிக கடினமான ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேவலமாகத் தோற்றதில் பஞ்சாப் கிங்ச் கனவு முடிவுக்கு வந்தது. இப்போது பிளே ஆஃப் வாய்ப்பு கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும்தான், ஆனால் மும்பை சன் ரைசர்ஸை பெரிய அளவில் வீழ்த்த வேண்டும், அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

  கடந்த சில போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்ற ஆச்சரியமே அதிகமாக உள்ளது. ஒரு போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஜடேஜாவுக்கு 20 ரன்களைப் போட்டுக் கொடுத்த போட்டியில் கொல்கத்தா வென்றிருந்தால் சிஎஸ்கே இன்று தடுமாறியிருக்கும். அதே போல்தான் மும்பை இந்தியன்சுக்கு ஷமி ஒரு ஓவரை போட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் எப்போதோ மும்பை காலியாகியிருக்கும், இந்த இரு அணிகளும் பிளே ஆஃபுக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் இப்படி ஒன்றை நாம் அடையாளப்படுத்த முடியும் என்பதே உண்மை.

  இந்நிலையில் நேற்று தோனியின் கேப்டன்சிக்கு சவால் அளித்த கே.எல்.ராகுல், வெளுத்துக் கட்டினார். முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் போல் சிஎஸ்கேவுக்கு எல்லா அணிகளும் வீசியிருந்தால் ருதுராஜ் கெய்க்வாடின் பலவீனம் தெரிந்திருக்கும், நேற்று சென்னை டாப் ஆர்டரை ஷார்ட் பிட்ச் பந்துகளில் காலி செய்தது பஞ்சாப். ருதுராஜ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இரையாகினர். தோனி ஒன்றுமேயில்லை, பாவம் அவரைப்போய் என்ன சொல்வது, ஜடேஜா போட்டுக்கொடுத்தால் அடிப்பார், நேற்று பஞ்சாப் தெள்ளத் தெளிவாக அவரையும் கட்டிப்போட்டது.

  பிறகு சேசிங்கில் தோனியின் கேப்டன்சிக்கு சவால் அளித்தார் ராகுல், 13 ஓவர்களில் மேட்சை முடித்தார், இதுவரை சிஎஸ்கே பெற்ற வெற்றிகள் எல்லாம் மற்ற அணிகளின் திறமையின்மையினால்தான் என்று நினைக்கும் படி 3வது ஹாட்ரிக் தோல்வியை பரிசாக அளித்தது பஞ்சாப் கிங்ஸ்.

  ஆட்டம் முடிந்து கே.எல்.ராகுல் பேட்டியளிக்கையில், “இது மிகவும் உஷ்ணமான தினம். திட்டம் மிகவும் எளிதானது. சில விகார சேகரங்களின் எண்ணிக்கையில் 14 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்தால் ஒரு வாய்ப்பு உள்ளது என்று எண்ணிக்கை கணக்கு என்னிடம் கூறப்பட்டது. 14 ஓவர்களுக்குள் முடிக்க விரும்பினோம், முடித்து விட்டோம்.

  Also Read: தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

  எல்லாம் நன்றாக அமைந்த தினமாக இது அமைந்தது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நான் என் விதத்தில் ஆடினேன் என்றால் அணியை கைவிட்டு விடுவதாக உணர்கிறேன். ஆனால் இந்த இன்னிங்சை இப்படித்தான் ஆட வேண்டும். எல்லாப் பந்தையும் அடிக்க முடியும் என்ற நாளாக இது அமைந்தது. பந்து நடுமட்டையில் பட்டுச் செல்லும் உணர்வே தனிதான்” என்றார் ராகுல்.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: