• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs Punjab| இன்றும் ரெய்னாவை ஓரங்கட்டுவாரா தோனி: சென்னை அணியின் மாற்றங்கள்

CSK vs Punjab| இன்றும் ரெய்னாவை ஓரங்கட்டுவாரா தோனி: சென்னை அணியின் மாற்றங்கள்

தோனி- சுரேஷ் ரெய்னா

தோனி- சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் 2021 குரூப் ஸ்டேஜ் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதே நேரத்தில் நடக்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் போட்டி மிக மிக முக்கியமானது. இதில் கொல்கத்தா வென்றால் பிளே ஆஃப் தகுதி பெறும்.

  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சி செய்கிறார், ரெய்னாவுக்குப் பதில் ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பளித்தார், இன்றைய போட்டியில் டிவைன் பிராவோவுக்குப் பதில் நியூசிலாந்து இடது கை வீரர் மிட்செல் சாண்ட்னர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெய்னாவின் ஐபிஎல் கதை இதோடு முடிகிறதா? அல்லது பிளே ஆஃப் சுற்றில் வாய்ப்பு பெறுகிறாரா என்பது தோனியின் கையில்தான் உள்ளது. ஆனால் தோனி தன்னைத் தானே டிராப் செய்து கொண்டால் அவரது நோக்க்

    கடந்த யுஏஇ தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாத சிஎஸ்கே அணி இந்த முறை சொல்லி அடித்தது, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனாலும் தகுதி பெற்ற பிறகு செம சாத்து வாங்கி 2 தோல்விகளைப் பெற்று முதலிடத்தை டெல்லியிடம் இழந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது என்று கூற முடியாது, ஆனால் பிளே ஆஃபுக்கு தகுதி பெற பேரதிசயம் நிகழ வேண்டும்.

    சென்னை அணி வருமாறு: ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ், மொயின் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி, மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா, தீபக் சாகர், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்.

    பஞ்சாப் கிங்ஸ்: ராகுல், அகர்வால், மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷாரூக் கான், சர்பராஸ் கான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய்.

    நேருக்கு நேர்:

    இரு அணிகளும் 24 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 15 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்த பஞ்சாப் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மும்பையில் மோதிய போது சிஎஸ்கே அணி பஞ்சாபை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: