மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகள் -0.071என்ற நெட் ரன் விகிதத்தில் 4-ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிக தைரியமான அதிரடியைக் காட்டி 58 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசி 88 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அதுவும் 25/4 என்ற நிலையிலிருந்து இவரும் ஜடேஜா (26), பிராவோ (23) இணைந்து ஸ்கோரை 156/6 என்று கொண்டு சென்றது கடைசியில் வெற்றி இலக்காக மாறியது. ருதுராஜ் கெய்க்வாட் பும்ராவை அடித்த 2 சிக்சர்கள் அபாரம்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சவுரவ் திவாரி அந்த குண்டு உடம்பை வைத்து கொண்டு அதிகபட்சமாக 40 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார், இது நல்ல இன்னிங்ஸ் அல்ல, அவர் நன்றாக ஆடவில்லை, உடம்பைத் தூக்கிக் கொண்டு அவரால் ஓடவும் முடியவில்லை. மும்பை 136 ரன்களில் முடங்கியது. தீபக் சாகர் அருமையாக வீசி 2 விக்கெட்டுகளையும் டிவைன் பிராவோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த ஆட்டம் பற்றி சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கூறும்போது, “30/4 என்ற நிலையில் மரியாதைக்குரிய ஒரு இலக்கை எட்டியாக வேண்டும். ருதுராஜ், பிராவோ எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு இலக்கிற்கு வழிவகுத்தனர். நாங்கள் 140 தான் வரும் என்று நினைத்தோம் ஆனால் ருது, பிராவோ 160 பக்கம் கொண்டு வந்தது அட்டகாசம். பிட்ச் இருவிதமாக இருந்தது, தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
நான் அதனால்தான் முன்னால் இறங்கினேன், ஏனெனில் பின்னால் இறங்கி ஆடுவது இந்தப் பிட்சில் கடினம். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நாம் கடைசியில் கடினமாக மட்டையைச் சுழற்றி பயனில்லை. அந்த தொடக்க சரிவிலிருந்து மீள்வது கடினம் ஆனால் சென்சிபிள் ஆக ஆடி அருமையாக பினிஷ் செய்தோம். ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை நிற்பது உண்மையில் அர்த்தபூர்வமானது.
Also Read: பந்துவீச்சில் அசத்திய சாஹர், ப்ராவோ - சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.