• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Final CSK vs KKR | வயதானவர்கள் என்று கேலி செய்தனர், இப்ப என்ன ஆச்சு?- ஸ்டீபன் பிளெமிங் பெருமிதம்

IPL 2021 Final CSK vs KKR | வயதானவர்கள் என்று கேலி செய்தனர், இப்ப என்ன ஆச்சு?- ஸ்டீபன் பிளெமிங் பெருமிதம்

சிஎஸ்கே சாம்பியன்

சிஎஸ்கே சாம்பியன்

அனுபவம் முக்கியம். இதற்கு முன்னால் ஆடியவர்கள், வெற்றிக்கு வித்திட்டவர்கள்தான் இப்போதும் பங்களிப்பு செய்துள்ளார்கள். நாங்கள் மற்ற அணிகளைப் போல் அனலிடிக்ஸ், நம்பர்கள் என்று போக மாட்டோம், தோனி உள்ளிட்டோரின் உள்ளுணர்வுதான் எங்கள் வெற்றியின் ரகசியம்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது, கடந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனதில் வயதான அணி டாடீஸ் ஆர்மி என்றெல்லாம் கேலி செய்தனர், ஆனால் அந்த ஒருமுறைதான் பிளே அஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சென்னை வெளியேறியது. ஆனால் இந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்சையும் வென்றது தோனி படையான சிஎஸ்கே.

    ஃபாப் டுபிளெசி, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பாவின் சிறு அதிரடி இன்னிங்ஸ், மொயின் அலியின் பினிஷிங்குடன் சிஎஸ்கே அணி 192/3 என்று எடுக்க தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து தோற்றது, சிஎஸ்கே 4வது முறையாக சாம்பியன் ஆனது.

    இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: “நிறைய இறுதிப் போட்டிகளில் ஆடியிருக்கிறோம், ஆனால் வெற்றி பெற்று ஆட்கொள்வது என்பது சவால், இந்த முறை கோட்டைக் கடந்து விட்டோம். எங்கள் அணியின் வயது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் 4 ஆண்டு சுழற்சியை கோப்பையை வென்று முடித்துள்ளோம்.

    அனுபவம் முக்கியம். இதற்கு முன்னால் ஆடியவர்கள், வெற்றிக்கு வித்திட்டவர்கள்தான் இப்போதும் பங்களிப்பு செய்துள்ளார்கள். நாங்கள் மற்ற அணிகளைப் போல் அனலிடிக்ஸ், நம்பர்கள் என்று போக மாட்டோம், தோனி உள்ளிட்டோரின் உள்ளுணர்வுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். அதே போல் வீரர்களுடன் பராமரிக்கும் உறவுகள் முக்கியம்.

    இது பழைய பாணி தான் ஆனால் எங்களுக்கு இதுதான் வெற்றிகளைப் பெற்றுத்தருகிறது. ஆண்டுகள் நகர்கின்றன, கடந்த ஆண்டுகளாக நாங்கள் செய்த வேலையும் போய் விட்டது. எங்களுக்கு எஞ்சியது சில பிரமாதமான நினைவுகளே. ஒரே அணியில் நீடித்ததும் அதில் வெற்றிகரமாக முடிந்ததும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

    கொல்கத்தா பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூறும்போது, “மிகப்பிரமாதமான ஒரு பயணம், சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். இதனை நாங்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்வோம். இறுதியில் தோற்கும் போது ஏற்படும் உணர்வென்னவெனில் ‘அதனால் என்ன?’ என்பதே. வீரர்கள் பிரமாதமாக திறனை மேம்படுத்தி ஆடினர். குறிப்பாக இளம் இந்திய வீரர்கள். அணி ஓனர்களுக்கு சப்தமாக என் நன்றியைக் கூறுகிறேன், பயங்கர சப்போர்ட்” என்றார் மெக்கல்லம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: