Home /News /sports /

IPL 2021 CSKvsDC| கடைசி ஓவரில் டாம் கரனைப் பயன்படுத்தியது ஏன்?- ரிஷப் பந்த்தின் நொய்மையான பதில்

IPL 2021 CSKvsDC| கடைசி ஓவரில் டாம் கரனைப் பயன்படுத்தியது ஏன்?- ரிஷப் பந்த்தின் நொய்மையான பதில்

தோனி, ரிஷப் பண்ட்

தோனி, ரிஷப் பண்ட்

நேற்றைய ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் ரபாடாவுக்கு முழு 4 ஓவர்களையும் கொடுக்காமல் கடைசி ஓவரை டாம் கரனை விட்டு வீசச் சொன்னது ஏன் என்ற கேள்வி பலமுனைகளிலிருந்தும் எழுந்துள்ள நிலையில் ரிஷப் பந்த் அதற்கு அளித்துள்ள பதில் நொய்மையாக இருந்தது.

மேலும் படிக்கவும் ...
    நேற்றைய ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் ரபாடாவுக்கு முழு 4 ஓவர்களையும் கொடுக்காமல் கடைசி ஓவரை டாம் கரனை விட்டு வீசச் சொன்னது ஏன் என்ற கேள்வி பலமுனைகளிலிருந்தும் எழுந்துள்ள நிலையில் ரிஷப் பந்த் அதற்கு அளித்துள்ள பதில் நொய்மையாக இருந்தது.

    டாம் கரன் அதுவரை சரியாக வீசியிருந்திருக்கலாம், அங்குதான் தந்திரமாக யோசித்திருக்க வேண்டும், எங்கு ரபாடாவிடம் கடைசி ஓவரை கொடுத்து விடுவார்களோ என்று தோனிக்கு நடுக்கம் ஏற்படும் வேளையில் ‘அப்பாடா! டாம் கரன் தானே’ என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கச் செய்து விட்டார் ரிஷப் பந்த். டாம் கரன் ஷார்ட் பிட்ச்களாக வீசினார், ஷார்ட் பிட்ச்களை தோனியின் உடலை நோக்கி வீசியிருந்தால், வேகமாக வீசியிருந்தால் அவரது வயதான ரிப்ளெக்ஸ் ஒர்க் ஆகியிருக்காது, டாம் கரன் ஓடி வந்து ஷார்ட் பிட்ச் தேங்காய் உடைத்ததோடு அழகாக வெளியேயும் வீசி மெதுவாகவும் வீசினார், இதை எப்படி ஒரு சவாலான பவுலிங், வெற்றிக்கான பவுலிங் என்று கூற முடியும்?

    ஆவேஷ் கான் புல்டாஸ்களாக வீசுகிறார் அவர் 4 ஓவர் 47 ரன்கள். டெல்லி பேட்டிங்கின் போது ரிஷப் பந்த் கிரீசில் இருந்தும் கடைசி ஓவரில் 3 டாட் பால்கள். கடைசி 7 பந்துகளில் 4 டாட் பால்கள், இதெல்லாம் என்ன? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது: “நிச்சயமாக பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை என்னால் போதிய வார்த்தைகளினால் விவரிக்க முடியவில்லை.

    Also read: IPL Playoff Dhoni| இந்த ஐபிஎல் தொடரில் நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை: வெற்றிக்குப் பிறகு தோனி

    கடைசி ஓவரை டாம் கரனிடம் கொடுத்ததற்குக் காரணம் அதுவரை நன்றாக வீசினார், விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதனால் அவரை கடைசி ஓவரை வீசச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். எங்கள் ஸ்கோர் டீசண்டானதுதான். சென்னை அணியினர் பெரிய அதிரடி தொடக்கம் கண்டனர். அதுதான் வித்தியாசம். நிச்சயம் எங்கள் தவறுகளை (?!) திருத்திக் கொள்வோம்.

    Also Read: IPL playoff CSK vs DC| ரபாடா 4 ஓவர் போடாதது ஏன்?- ஆவேஷ் கான் திடீரென புல்டாஸ் பவுலரானது எப்படி?கடைசி ஓவரை டாம் கரன் வீசியது ஏன்?-எஞ்சும் கேள்விகள்

    அதிலிருந்து கற்றுக் கொண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார் ரிஷப் பந்த்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, CSK, IPL 2021, Rishabh pant

    அடுத்த செய்தி