• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனிக்கு சரியாக வீசவில்லை அதற்கான விலையைக் கொடுத்தோம்- ரிக்கி பாண்டிங்

தோனிக்கு சரியாக வீசவில்லை அதற்கான விலையைக் கொடுத்தோம்- ரிக்கி பாண்டிங்

தோனியை புகழும் ரிக்கி பாண்டிங்

தோனியை புகழும் ரிக்கி பாண்டிங்

நீண்ட நாளைக்குப் பிறகு தோனியின் பினிஷிங் இன்னிங்சை பார்த்து ரசிகர்கள் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர், ரசிகர்கள் மட்டுமல்ல, டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் தோனியின் இன்னிங்சைப் பாராட்டியுள்ளார்.

  • Share this:
    ஆட்டத்தின் மிகப்பெரிய பினிஷர் தோனி என்பதை மீண்டும் ஒரு முறை அவர் நிரூபித்து விட்டர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். ஆவேஷ் கானை அடித்த சிக்ஸ், பிறகு டாம் கரனை ஒரு ஸ்கொயர் கட் மற்றும் ஒரு புல் ஷாட் ரசிகர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று விட்டது.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது: “தோனி கிரேட்களில் ஒருவர். நாங்கள் என்ன யோசித்தோம் என்றால் அடுத்து ஜடேஜா வருவாரா, தோனி வருவாரா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். தோனிதான் நிச்சயம் இறங்குவார் பினிஷ் செய்ய முயற்சி செய்வார் என்று கூறினேன்.

    அவர் முடியும்போது, ஓய்வு பெறும்போது நிச்சயம் இந்த ஆட்டம் கண்டிராத மிகப்பெரிய, கிரேட் பினிஷர்களில் ஒருவராகவே நினைவில் கொள்ளப்படுவார். ஆனால் இன்னொன்றையும் கூறி விடுகிறேன் தோனிக்கு எதிராக சரியாக திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை. கடைசி 2 ஓவர்கள் சரியாக வீசவில்லை, அவருக்கு திட்டமிட்டபடி வீசவில்லை.

    எனவே தவறு செய்தால் சரியாக வீசவில்லை எனில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதுதான். இதை தோனி நீண்டகாலமாகவே செய்து வருகிறார். தோனிக்கு வீச வேண்டிய இடத்தில் எங்கள் பவுலர்கள் வீசவில்லை. அதற்கான விலையைக் கொடுத்தோம்.” என்றார் பாண்டிங்.

    Also Read: சிஎஸ்கே-வின் 9வது அதிசயம்: நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்‘வயதின் தடைகள் கடந்த தோனி’

    ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “கிரேட், எங்களுக்கு உணர்ச்சிகரமாக பெரிய விஷயமாக இருந்தது. அவர் ஒவ்வொருமுறை இறங்கும்போதும் அவருக்கு ஆசி கூறுவோம், ஏனெனில் அவர் பிரஷரில் இறங்குகிறார். அவர் மீதான பெரிய எதிர்பார்ப்பு அவரை உந்தியது. ஓய்வறையிலும் அனைவரும் உணர்ச்சிவயமாக இருந்தோம், தோனி நான் இறங்குகிறேன் என்றார். நான் தடுக்கவில்லை, ஏனெனில் அதன் முடிவைத்தானே நாம் பார்த்தோம்” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: