Home /News /sports /

IPL playoff CSK vs DC | ரபாடா 4 ஓவர் போடாதது ஏன்?- ஆவேஷ் கான் திடீரென புல்டாஸ் பவுலரானது எப்படி?கடைசி ஓவரை டாம் கரன் வீசியது ஏன்?-எஞ்சும் கேள்விகள்

IPL playoff CSK vs DC | ரபாடா 4 ஓவர் போடாதது ஏன்?- ஆவேஷ் கான் திடீரென புல்டாஸ் பவுலரானது எப்படி?கடைசி ஓவரை டாம் கரன் வீசியது ஏன்?-எஞ்சும் கேள்விகள்

வெற்றிக்குப் பிறகு இறுதியில் சிஎஸ்கே

வெற்றிக்குப் பிறகு இறுதியில் சிஎஸ்கே

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 பிளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சிஎஸ்கே அணி போராடி வென்றது, தோனி ரொம்ப நாளைக்குப் பிறகு தன் பினிஷிங் டச் திறமைகளை மீண்டுமொரு முறை காட்டி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 பிளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சிஎஸ்கே அணி போராடி வென்றது, தோனி ரொம்ப நாளைக்குப் பிறகு தன் பினிஷிங் டச் திறமைகளை மீண்டுமொரு முறை காட்டி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

டெல்லி பேட்டிங்கின் போது கடைசி ஓவரை ஷர்துல் தாக்கூர் தானே வீசினார்? இல்லை வெஸ்லி ஹால் வீசினாரா? ரிஷப் பந்த் முதல் 3 பந்துகளை ரன் ஏதும் எடுக்காமல் ஆடியது ஏன்? கடைசி ஓவர் 3 டாட்பால்கள். கடைசி 7 பந்துகளில் 4 டாட் பால்கள், ரன் இல்லாத பந்துகள் இதையெல்லாம் நம்பத்தான் முடியுமோ?

நேற்றைய சென்னை வெற்றியில் ரிஷப் பந்த் கேப்டன்சி போதாமை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது, இது அவரது கேப்டன்சி போதாமையா, அல்லது வேறு பல கணக்கீடுகளின் குறுக்கீடா, உஷ் கண்டுக்காதீங்க தருணமா என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. டெல்லியின் சிறந்த பவுலர் ரபாடா 3 ஓவர் 23 ரன்களைத்தான் விட்டுக்கொடுத்தார் அவர் 20வது ஓவரை வீசவில்லை, 19வது ஓவரை ஆவேஷ் கான் வீசினார், இவருக்கு புல்டாஸ் தவிர வேறு எதுவும் தெரியாமல் போனது எப்படி என்ற சந்தேகமும் எழுகிறது. கம்பீர் கூறியது போல் ரபாடா 19வது ஓவரை வீசியிருக்க வேண்டும்.

மேலும் அக்சர் படேல் 3 ஓவர்கள்தான் வீசினார், அனைத்திற்கும் மேலாக அஸ்வினை ராபின் உத்தப்பாதான் அடித்தார், ஆனால் அதற்காக 2 ஓவர்களுடன் அவரை நிறுத்தியதும் ஏதொ வழிவகை செய்து கொடுத்தது போல் இருந்தது. டாம் கரன் திடீரென அணிக்குள் வந்து ஒரு முக்கியமான பிளே ஆஃப் போட்டியில் கடைசி ஓவரை, அதுவும் தோனி கிரீசில் இருக்கும் போது வீச எப்படி அனுமதிக்கப்பட்டார், அதுவும் அனுபவ ரபாடாவை ஓவர்லுக் செய்து விட்டு! சரி அதுவரை நன்றாக வீசிய டாம் கரன் கடைசி ஓவரில் அவ்வளவு ஷார்ட் பிட்ச்கள், வைடு என்று வீசியது எப்படி? தோனி பந்து மட்டையில் படுவதே ஆச்சரியம் என்ற நிலையில் பேட் செய்து வருகிறார் அவர் 3 பவுண்டரி 1 சிக்ஸ் 6 பந்துகளில் 18 ரன்கள் என்றால் எங்கேயோ இடிக்கத்தானே செய்கிறது?

உண்மையில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி வெளியேறியவுடனேயே சிஎஸ்கே கதை முடிந்தது. 3 ஓவர் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் 18வது ஓவரில் நார்ட்யே வீசுகிறார், ருதுராஜ் கெய்க்வாடுக்கு லாங் ஆஃப் இல்லாமல் பந்து வீசி அருமையாக ஒரு ஹாஃப் வாலி பந்தை வீசுகிறார் அது ஹெட்மையர் டைவையும் தாண்டி லாங் ஆஃப் பவுண்டரிக்குச் செல்கிறது. மேலும் ஹெட்மையரும் மிட் ஆஃபில் சரியான பொசிஷனில் நிற்கவில்லை. இது எப்படி? இதற்கு முன்னால் ஆவேஷ் கான் 17வது ஓவரில் புல்டாஸ்களாக வீசித்தள்ளுகிறார், யாரும் அவரிடம் வந்து எதுவும் சொல்லவும் இல்லை. 19வது ஓவரில் ஒரு புல்டாஸில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த சவுகரிய புல்டாசில் மொயின் அலி பவுண்டரி விளாசுகிறார்.

Also Read: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி- ஐ.பி.எல்லின் ரியல் சூப்பர் கிங்ஸ் என நிரூபித்த சென்னை அணி

பிறகு அதே ஓவரில் தோனி இறங்கியவுடன் அவருக்கு அருமையாக ஒரு பந்தை தேங்காய் உடைப்பது போல் அரைக்குழியில் குத்தி ஒரு பந்தை போடுகிறார், தோனி அதை சிக்ஸ் அடிக்கிறார்.

அதே போல் அக்சர் படேலை தேவையில்லாமல் முன்னால் களமிறக்கியது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அய்யர் ஆட்டமிழந்த விதம் விக்கெட்டை தூக்கி எறிந்த தருணமாக இருந்தது. கடைசியில் ஷிம்ரன் ஹெட்மையர் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க சரவெடி பேட்டிங்கை எதிர்பார்த்த ரிஷப் பந்த் 35 பந்துகளில் 51 என்பது சற்றே மந்தமான இன்னிங்ஸ்தான். கொஞ்சம் நெருக்கியிருந்தால் 180-185 ரன்களை எடுத்திருக்கலாம். இப்படியாக ஏகப்பட்ட விஷயங்கள் கேள்விகளாகவே உள்ளன. ஒன்றெயொன்று ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பெரிய பேட்ஸ்மெனாக உருவெடுத்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சிஎஸ்கே வெற்றி அல்லது டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி உண்மையில் நிறைய கேள்வியைத்தான் எழுப்புகின்றதே தவிர ஒரு நல்ல கிரிக்கெட்டைப் பார்த்ததற்கான மகிழ்ச்சியையும் நிறைவையும் தரவில்லை.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, Dhoni batting, IPL 2021, Rishabh pant

அடுத்த செய்தி