• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs RCB | சென்னை அணியில் முக்கிய மாற்றம்?

CSK vs RCB | சென்னை அணியில் முக்கிய மாற்றம்?

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 35-வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியில் 2-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும், 3-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

    சிஎஸ்கே அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்ற உத்வேகத்தில் உள்ளது. அதே சமயம் ஆர்சிபி அணி கடந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீள முழுதிறனையும் வெளிப்படுத்தும்.

    பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 28முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 18 முறை வெற்றி பெற்றுள்ளது.ர்சிபி 9 போட்டிகளில் வெல்ல ஒரு போட்டி நோ-ரிசல்ட் ஆனது. கடைசியாக இரு அணிகளும் மோதிய போது ஐபிஎல் 2021-ல் பெங்களூரு அணியை சென்னை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    மேலும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்து வீரர் சாம் கரன் இன்றையப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஹசில்வுட்டிற்கு பதிலாக அவர் களமிறங்குவார். கடைசி போட்டியில் சாம் குரன் குவாரண்டைன் காரணமாக பங்கேற்கமால் இருந்தார்.

    சிஎஸ்கே உத்தேச அணி : டுபிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, சாம் கரன், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, தீபக் சாகர், ஷர்துல் தாக்கூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: