சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன?

பிராவோ, தோனி

சென்னை அணி நிர்ணயித்த இந்த இலக்கை 18.4 ஓவரில்  எட்டிப்பிடித்து எளிதாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 188 ரன்கள் குவித்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரெய்னா நேற்று அதிரடியில் இறங்கினார்.

  ரெய்னாவின் வழக்கமான சிக்ஸர்களை காண முடிந்தது. தோனி டக் அவுட்டாகி ஏமாற்றினார். பொதுவாக பேட்டிங்கில் கடந்த சில சீசன்களாக மந்தமாக ஆடிவந்த சென்னை அணி நேற்று அதிரடியில் மிரட்டியது. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சென்னை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அட்டாக்கிங் செய்தனர். கடைசியில் சாம் கரன் மிரட்ட சென்னை அணி 188 ரன்களை எடுத்தது.

  சென்னை அணி நிர்ணயித்த இந்த இலக்கை 18.4 ஓவரில் இந்த இலக்கை எட்டிப்பிடித்து எளிதாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ். ப்ரித்வி ஷா - தவான் கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டியது. இதனால் சென்னை அணியில் பந்துவீச்சாளர்களுக்கு பிரஷர் கூடியது. பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க முடியவில்லை. ரன்களையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைத்தது. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது.

  நேற்றைய போட்டியில் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 12லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இது முதல்தடவை என்பதால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்ந்தால் ஒரிரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதியாகும். ஒரு மணிநேரத்துக்கு 14.1 ஓவர்களில் வீசினால்தான் குறிப்பிட்ட நேரத்தில் இன்னிங்ச்ஸை முடிக்க முடியும்.

  இரண்டாவது தடவை இதுபோல் அதிகநேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதமும் அணி வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவிகிதம் எது குறைவாக உள்ளது அது அபராதமாக விதிக்கப்படும். மூன்றாவது முறை இதுபோல் நிகழ்ந்தால் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அணி வீரர்களுக்கு 12 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் 50 சதவிகிதிம் எது குறைவாக உள்ளதோ அது அபராதமாக விதிக்கப்படும் என ஐபிஎல் விதிமுறை கூறுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: