மிரட்டிய வின்டேஜ் ரெய்னா.. அதிரடி காட்டிய சாம் கரன் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்கு

மிரட்டிய வின்டேஜ் ரெய்னா.. அதிரடி காட்டிய சாம் கரன் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்கு

ரெய்னா, மொயின் அலி

தோனி மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் இன்ஸைடு எட்ச் ஆகி தோனி க்ளீன் போல்டானார்.

  • Share this:
    14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸை பேட்டிங் செய்ய பணிந்தது. சென்னை இன்னிங்ஸை ருத்துராஜ் கேய்க்வாட் , டூபிளிசிஸ் ஆகியோர் களமிறங்கினார். 2-வது ஓவரில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் டூபிளிசிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டுபிளிஸிஸ் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து மொயின் அலி களத்துக்கு வந்தார். அடுத்த ஓவரில் ருத்துராஜ் கேய்க்வாட் விக்கெட்டை பறிக்கொடுத்தார். 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது.

    இதனையடுத்து சின்னதல ரெய்னா களத்துக்கு வந்தார். மொயின் அலி - ரெய்னா இருவரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். இருவரும் அஸ்வினை டார்கெட் செய்தனர். சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் வீசிய 9-வது ஓவரில் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய மொயின் அலி தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். மொயீன் அலி 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து அம்பத்தி ராயுடு களமிறங்கினார்.

    இருவருமே டெல்லி பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்தனர். இந்தப்போட்டியில் வின்டேஜ் ரெய்னாவை பார்க்க முடியாது. தனது வழக்கமான ஷார்ட்டுகளை ஆடி விருந்து படைந்தார் ரெய்னார். தனது அரைச்சதத்தையும் கடந்தார். டாம் கரன் மெதுவாக வீசிய பந்தை தூக்கி அடிக்கமுயன்று தவானிடம் சிக்கினார். இதனையடுத்து ஜடேஜா களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ஆடி வந்த நிலையில் ரன் அவுட்டில் சிக்கினார் ரெய்னா. இரண்டாவது ரன்னுக்கு கால் செய்த ஜடேஜா ஃபீல்டரை பார்த்து ரன்னப்பை ஸ்லோ செய்தார். பாதி தூரம் வந்த மீண்டும் திரும்பிய ரெய்னா ரன் அவுட்டானார். 54 ரன்களில் ரெய்னா பெவிலியன் திரும்பினார்.

    தோனி மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் இன்ஸைடு எட்ச் ஆகி தோனி க்ளீன் போல்டானார். இதனையடுத்து களமிறங்கிய சாம் கரன் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ஜடேஜா - சாம்கரன் இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடியை கையில் எடுத்தனர். இருவரும் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினர். 19-வது ஓவரை வீசிய டாம் கரன் பந்துவீச்சை. சகோதரரான சாம் கரன் பதம்பார்த்தார். இரண்டு சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகப்பட்சமாக  கிறிஸ் வோக்ஸ், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Published by:Ramprasath H
    First published: