IPL-2021 | அம்பத்தி ராயுடு சூறாவளி ஆட்டம்: மும்பையை புரட்டிஎடுத்த சென்னை - 218 ரன்கள் குவிப்பு

IPL-2021 | அம்பத்தி ராயுடு சூறாவளி ஆட்டம்: மும்பையை புரட்டிஎடுத்த சென்னை - 218 ரன்கள் குவிப்பு

அம்பத்தி ராயுடு, ஜடேஜா

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 220 குவித்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 27-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளான மும்பைக்கும் சென்னைக்கும் இடையே போட்டி நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் கடந்த கோப்பையை வென்ற மும்பை அணி இந்த முறை தடுமாற்றத்துடனே விளையாடிவருகிறது. 6 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தவருகிறது.

    இந்தநிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளஸி களமிறங்கினர். ரூதுராஜ் 4 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, டூப்ளஸியுடன் மோயின் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை திணறடித்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மொயின் அலி 58 ரன்களைக் கடந்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து டூப்ளஸிஸ் 50 ரன் எடுத்த நிலையில் பொல்லார்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்ததாக களமிறங்கிய அம்பதி ராய்டு, தொடக்கம் முதலே சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

    அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்களைக் குவித்தார். ஆட்டநேர இறுதியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களைக் குவித்தது. மும்பை அணியின் சார்பில் தவல் குல்கர்னியும், ஜஸ்ப்ரித் பும்ராவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: