• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: சிஎஸ்கே அணிக்கு வருகிறார் சரவெடி ஆல்ரவுண்டர்- முன்னாள் வீரரின் மகன்

IPL 2021: சிஎஸ்கே அணிக்கு வருகிறார் சரவெடி ஆல்ரவுண்டர்- முன்னாள் வீரரின் மகன்

டோமினிக் டிரேக்ஸ்

டோமினிக் டிரேக்ஸ்

சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதையடுத்து புதிய ஆல்ரவுண்டரை சிஎஸ்கே அணி களமிறக்குகிறது.

  • Share this:
    மே.இ.தீவுகளைச் சேர்ந்த டோமினிக் டிரேக்ஸ் என்பவர்தான் அந்த புதிய அதிரடி ஆல்ரவுண்டர். இவர் முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் வாஸ்பர்ட் டிரேக்ஸின் மகன் தான். தந்தை மே.இ.தீவுகளுக்கு 12 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார், மகன் டோமினிக் டிரேக்ஸ் கரீபியன் பிரிமியர் லீகில் கலக்கு கலக்கென்று கலக்கினார்.

    சாம் கரனுக்கு சமமான டோமினிக் டிரேக்ஸ் ஒரு சரவெடி வீரர், ஆல்ரவுண்டர். இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டிரேக்ஸ் ஆடுவாரா என்பது தெரியவில்லை, ஆனால் பிளே ஆஃப் சுற்றில் ஆட வாய்ப்புள்ளது, அல்லது முக்கியமான பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு டோமினிக் டிரேக்ஸை தோனி எப்படி ஆடுகிறார் என்று பரிசோதிக்க விரும்பலாம்.

    டிரேக்ஸ் பிப்ரவரி 6, 1998-ல் பிறந்தவர். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர். 2018-ல் பார்படோஸ்-ஜமைக்கா முதல்தரப் போட்டியில் ஒரேயொரு முறை ஆடியுள்ளார். இவர் பார்படோஸ் அணியைச் சேர்ந்தவர். இதே ஆண்டில்தான் டோமினிக் டிரேக்ஸ் டி20 மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகமானார்.

    கரீபியன் பிரீமியர் லீகில் பார்படாஸ் ட்ரைடெண்ட்ஸ் அணியில் ஆடினார் டோமினிக் டிரேக்ஸ். பிறகு செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் அணிக்காக ஆடினார். கரீபியன் பிரீமியர் லீகில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லீக் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்தார். பேட்டிங்கிலும் அதிரடி பங்களிப்புகளை செய்த டிரேக்ஸ் 5 இன்னிங்ஸ்களில் 102 ரன்கள் எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 161.90.

    குறிப்பாக இந்த ஆண்டின் கரீபியன் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் டிரேக்ஸ் தன் ஃபயர்பவரைக் காட்டினார். 160 ரன்கள் இலக்கை விரட்டும்போது செயிண்ட் கிட்ஸ் அணி 95/5 என்று தடுமாறியது. அப்போது இறங்கிய சரவெடி டிரேக்ஸ் 24 பந்துகளில் 48 ரன்களை விளாசி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெறச் செய்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

    Also Read: ஓய்வுக்குப்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கப்போகிறாரா மகேந்திர சிங் தோனி?

    டிவைன் பிராவோ கேப்டன்சியில் இவர் ஆடினார், இப்போது டிவைன் பிராவோ பரிந்துரையில்தான் டிரேக்ஸ் சிஎஸ்கேவுக்குள் நுழைகிறார் என்று தெரிகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: