• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சென்னை அணி

IPL 2021 | 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சென்னை அணி

மும்பை அணி

மும்பை அணி

CSK vs MI Live , IPL 2021: இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறுகிறது.

  • Share this:
    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன.

    மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீகரகத்தில் மும்பை மற்றும் சென்னை அணி மோதும் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளிஸிஸ் மற்றும் ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    ORANGE CAP:

    PURPLE CAP:

    அதில், 3 பந்துகளை எதிர்கொண்ட டூப்ளிஸிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் மிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனால், சென்னை அணி 2 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. அதனையடுத்து, தற்போது அம்பதி ராயுடு களமிறங்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: