முகப்பு /செய்தி /விளையாட்டு / பந்து பேட்டில் படுகிறதே என தோனி திருப்தி அடைய வேண்டியதுதான் - பிரையன் லாரா

பந்து பேட்டில் படுகிறதே என தோனி திருப்தி அடைய வேண்டியதுதான் - பிரையன் லாரா

பிரையன் லாரா

பிரையன் லாரா

கிறிஸ் கெய்ல் 42 வயதானாலும் இன்னும் அதிரடி பாணியை கைவிடவில்லை, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார், ஆனால் தோனி இறங்கினால் எதிரணியினர் இப்போதெல்லாம் நிம்மதி அடைகின்றனர், அவர் விக்கெட்டை வீழ்த்துவதை ஒரு முனைப்பாகக் கொள்வதில்லை.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கிறிஸ் கெய்ல் 42 வயதானாலும் இன்னும் அதிரடி பாணியை கைவிடவில்லை, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார், ஆனால் தோனி இறங்கினால் எதிரணியினர் இப்போதெல்லாம் நிம்மதி அடைகின்றனர், அவர் விக்கெட்டை வீழ்த்துவதை ஒரு முனைப்பாகக் கொள்வதில்லை.

காரணம் அவர் என்றுமே டெகினிக்கலாக நல்ல பேட்ஸ்மென் அல்ல, அவருக்கென்று ஒரு பாணி வைத்திருப்பர் அதை உள்ளுணர்வாக வைத்துக் கொண்டு ஆடுபவர்தான், இது நீண்ட காலத்துக்கு கை கொடுக்குமா? நினைத்த போது சிக்ஸ் அடிக்க முடியுமா? காரணம் அவர் என்றுமே பந்தை பார் அடி என்று ஆடியவர் அல்ல. சிக்ஸ் அடிக்க வேண்டிய பந்தில் சிங்கிள், இரண்டு என்று தட்டி விடுவார், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் பிக் ஷாட் ஆடலாம் என்பது தோனியின் துணிபு, ஆனால் அது கைகூடி நீண்ட காலம் ஆகிவிட்டது.

இந்நிலையில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய மந்தமான இன்னிங்ஸ் பலர் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. விஸ்வநாதன் வேலை வேண்டும் என்று பாடுவது போல் எம்.எஸ்.தோனி ரன்கள் வேண்டும் என்று பாட வேண்டியதுதான் போலிருக்கிறது அவரது பேட்டிங். ஜடேஜாவுக்கு முன்னதாக தோனி களமிறங்கக் கூடாது என்கிறார் பிரையன் லாரா.

இது பழைய தோனி அல்ல, நாம் அறிந்த தோனி அல்ல என்கிறார் பிரையன் லாரா. ஏற்கெனவே தோனி ஓய்வு எடுத்துக்கலாமே, ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்? என்று கேட்டு தல ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்நிலையில் அவர் மேலும் கூறும்போது, “தோனி பார்முக்கு வர முயற்சி செய்கிறார், ஆனால் அவர் பேட்டிங் மந்தமாகி விட்டது, தாமதமாகச் செயலாற்றுகிறார்.

நமக்குத் தெரிந்த தோனி அல்ல இது. பந்து மட்டையில் படுவதிலேயே அவர் திருப்தி அடைவார். அவர் பினிஷிங் செய்யவில்லை. ஜடேஜா தோனிக்கு முன்னால் இறக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜடேஜா நல்ல பார்மில் இருக்கிறார், சிஎஸ்கே டெத் ஓவர் பேட்டிங் இவர் கையில் உள்ளது. தோனி எவ்வளவு பெரிய பினிஷர் என்பதை நாம் அறிவோம். அவர் அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டது. பார்மில் இருக்கும் தோனி பெரிய சொத்தல்லவா” என்கிறார் பிரையன் லாரா.

top videos

    27 பந்துகளில் நேற்று 18 ரன்கள் எடுக்கத் தோனி திணறி கடைசியில் ஆவேஷ் கான் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். தோல்வி தோனி அணியை ஒன்றும் செய்யாது என்றாலும் பிளே ஆஃபுக்கு முன்னால் தன்னம்பிக்கை இல்லாமல் களமிறங்க வேண்டி வரும் என்பதே.

    First published:

    Tags: Brian lara, CSK, Dhoni batting, IPL 2021