• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Dhoni| இதிலும் தல தோனிதான் நம்பர் 1- சாதனை மன்னனுக்கு இன்னொரு மகுடம்

IPL 2021 Dhoni| இதிலும் தல தோனிதான் நம்பர் 1- சாதனை மன்னனுக்கு இன்னொரு மகுடம்

டோனி

டோனி

டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையிலும் தல தோனி முன்னிலை வகிக்கிறார். நேற்று ஐபிஎல் 2021 கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி வென்றது, இது 4-வது ஐபிஎல் மகுடம்.

  • Share this:
    சாதனை மன்னன் தோனி இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார், அனைத்து டி20க்களிலும் சேர்த்து 300 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்து சாதனை புரிந்துள்ளார். இவர்தான் நம்பர் 1 . சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உட்பட. 2007 முதல் 2021 வரை தோனியைப் பார்த்தோமானால், 5986 ரன்கள். சராசரி 38.87. அதிகபட்ச ஸ்கோர் 84. விக்கெட் கீப்பராக 170 கேட்ச்கள், 69 ஸ்டம்பிங்குகள்.

    இவருக்கு அடுத்த இடத்தில் அதிக டி20 போட்டிகளில் கேப்டன்சி செய்தவர் மே.இ.தீவுகளின் டேரன் சமி உள்ளார். இவர் மே.இ.தீவுகள், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பெஷாவர் ஸால்மி உள்ளிட்ட அணிகளுக்கு டி20 கேப்டனாக தோனிக்கு அடுத்து 208 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். 2006-2020 வரை இவரைப் பார்த்தோமானால் 2688 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சம் 71 நாட் அவுட். 86 விக்கெட் பெஸ்ட் பவுலிங் 4/16. 84 கேட்ச்கள் எடுத்துள்ளார்.

    அதிக டி20 போட்டிகள் கேப்டன்சியில் கிங் கோலி 3ம் இடத்தில் உள்ளார். மொத்தம் 185 டி20 போட்டிகளில் விராட் கோலி கேப்டன்சி செய்துள்ளார். 2011-2021 என்று இவரது சாதனையைப் பார்த்தோமானால் 6,383 ரன்கள் என்று வெளுத்து கட்டியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 113. சராசரி 43.42. கேட்ச்கள்:80.

    கோலிக்கு அடுத்தபடியாக அதிக டி20 கேப்டன்சி எண்ணிக்கையில் கவுதம் கம்பீர் இருக்கிறார் இவர் 170 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். 4,291 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதங்களை அடித்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 118.

    இதையும் படிங்க: IPL 2021 Champion CSK| கிரேட் கேப்டன்சி... ஹேட்ஸ் ஆஃப் தோனி! - கொல்கத்தாவை அடக்கியது எப்படி?

    இவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் சர்பராஸ் அகமெட் 142 போட்டிகளிலும், இங்கிலாந்தின் இயான் மோர்கன் 138 போட்டிகளிலும் கெய்ரன் பொலார்டு 134 போட்டிகளிலும் வங்கதேசத்தின் மஹமுதுல்லா 133 போட்டிகளிலும் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 133 போட்டிகளிலும் வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரகிம் 132 போட்டிகளிலும் ஆரோன் பிஞ்ச் 131 போட்டிகளிலும், வங்கதேசத்தின் முன்னாள் வீரர் மஷ்ரபே மோர்டசா 126 போட்டிகளிலும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் பிக்பாஷ் லீக் வீரர் கிளிங்கர் 120 போட்டிகளிலும் சங்கக்காரா 114 போட்டிகளிலும் டி20களில் கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால் ஆயிரம் பேர் வந்தாலும் இதிலும் தல தோனிதான் நம்பர் 1, 300 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: