Home /News /sports /

IPL 2021: கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள்.. 25 பந்துகளில் ஜடேஜா அரைசதம்... - ஆர்.சி.பி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு

IPL 2021: கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள்.. 25 பந்துகளில் ஜடேஜா அரைசதம்... - ஆர்.சி.பி வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு

ஜடேஜா

ஜடேஜா

ரெய்னா, டுப்ளிஸில், ராயுடு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலை கடைசி ஓவரில்  ஜடேஜா புரட்டி எடுத்தார். 

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஃபிட்னஸ் பிரச்னை காரணமாக இந்தப்போட்டியில் மொயின் அலி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பிராவோ அணிக்குள் வந்தார். சென்னை அணியில் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து ருத்துராஜ் கெயிக்வாட், டுபிளிஸிஸ் இருவரும் சென்னை இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். டுப்ளிஸிஸ் சிக்ஸர் பவுண்டரியுமாக அதிரடி காட்டினார். ருத்துராஜ் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

    பவர்ப்ளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. டுப்ளிஸில், கெயிக்வாட் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டது. விராட் கோலியும் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினார். ஒருவழியாக சாஹல் கேப்டன் கோலிக்கு கைக்கொடுத்தார். 10 வது ஓவரின் முதல் பந்தில் சாஹல் பந்துவீச்சில் ருத்துராஜ் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சென்னை அணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்திருந்தது. ருத்துராஜ் கெயிக்வாட் 33 ரன்களில் அவுட்டானார்.

    டுபிளிஸிஸ்


    இதனையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். சஹால் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது ஃபார்மை காட்டினார். 10 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்ததிருந்தது. சிறப்பாக விளையாடி வந்த டுப்ளிஸிஸ் தனது அரைசதத்தை கடந்தார். ரெய்னா அதிரடி காட்டினார். ஹர்ஷல் பட்டேல், கிறிஸ்டியன் இருவரும் ஸ்லோவர், கட்டர் என சென்னை பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் தொந்தரவு கொடுத்தனர். 14 ஓவரின் 4 பந்தில் ஹர்ஷல் பட்டேலின் ஸ்லோ பாலில் ரெய்னா சிக்கினார்.

    சிக்ஸருக்கு விரட்ட நினைத்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். ரெய்னா 24 ரன்களில் ஏமாற்றமளித்தார். இதனையடுத்து அம்பத்தி ராயுடு களமிறங்கினார். அடுத்த பந்திலே டுப்ளிஸில் அவுட்டாகி அதிர்ச்சிக்கொடுத்தார். இதனையடுத்து ஜடேஜா களமிறங்கினார். வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கேட்ச் கண்டத்தில் இருந்து ஜடேஜா தப்பினார். கைக்கு வந்த கேட்சை கிறிஸ்டியன் வீணடித்தார்.

    15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 117 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கிடையில் ராயுடுக்கு காயம் ஏற்பட்ட காரணமாக சென்னை அணியின் இன்னிங்ஸில்  ஒரு தேக்கம் ஏற்பட்டது. 2 ரன்கள் ஓட முடியவில்லை. ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ராயுடு அவுட்டானார். இதனையடுத்து தோனி வந்தார். ரெய்னா, டுப்ளிஸில், ராயுடு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலை கடைசி ஓவரில்  ஜடேஜா புரட்டி எடுத்தார்.  முதல் மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசினார். அதில் ஒரு நோபால் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய  ஜடேஜா 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.  சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஜடேஜா கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். ஜடேஜா 28 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் சென்னை அணி 37 ரன்கள் எடுத்தது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai Super Kings, Cricket, IPL 2021, MS Dhoni, Raina, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி