• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தல தோனியும், சின்னத் தல ரெய்னாவும் அவுட்: 47 ரன்களுக்கு 4 விக்கெட் - விரக்தியடைந்த சென்னை ரசிகர்கள்

தல தோனியும், சின்னத் தல ரெய்னாவும் அவுட்: 47 ரன்களுக்கு 4 விக்கெட் - விரக்தியடைந்த சென்னை ரசிகர்கள்

தோனி

தோனி

CSK vs MI Live Score, IPL 2021: சென்னை அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

  • Share this:
    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீகரகத்தில் மும்பை மற்றும் சென்னை அணி மோதும் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளிஸிஸ் மற்றும் ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    அதில், 3 பந்துகளை எதிர்கொண்ட டூப்ளிஸிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் மிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் நிதானமாக ஆடி அணியை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்பதி ராயுடு ரிட்டயர் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

    PURPLE CAP:

    RESULT DATA:
    அவரும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பொறுப்பற்ற ஷாட் அடித்து போல்ட் பந்து வீச்சில் ராகுல் சாஹரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கினார். அவரும், 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தோனி, சுரேஷ் ரெய்னா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ரூத்ராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடிவருகிறார். அவருடன் தற்போது ஜடேஜா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை விளையாடிவருகிறார். ரூத்ராஜ் 23 ரன்களிலும், ஜடேஜா 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: