வான்கடேவில் வானவேடிக்கை.. ஜடேஜா ஒன் மேன் ஷோ.. ஆர்.சி.பியை துவம்சம் செய்தது தோனியின் சிஎஸ்கே படை!

ஜடேஜா

ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் சென்னை அணி 37 ரன்கள் எடுத்தது. இதில் ஜடேஜா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். பவர்ப்ளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

  டுப்ளிஸில், கெயிக்வாட் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். சென்னை அணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்திருந்தது. ருத்துராஜ் கெயிக்வாட் 33 ரன்களில் அவுட்டானார். 10 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்ததிருந்தது. சிறப்பாக விளையாடி வந்த டுப்ளிஸிஸ் தனது அரைசதத்தை கடந்தார். ரெய்னா அதிரடி காட்டினார்.

  ஹர்ஷல் பட்டேல் தனது ஒரே ஓவரில் ரெய்னா, டுப்ளிஸிஸ் இருவரையும் காலி செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஜடேஜா, அம்பத்தி ராயுடு களமிறங்கினர். மிடில் ஓவர்களில் ஆர்.சி.பி பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியது. இதனால் பவுண்டரிகள் அதிகம் வரவில்லை. இதற்கிடையில் அம்பத்தி ராயுடுவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் ரன்களுக்கு ஓட முடியவில்லை. இதனால் ரன்வேகமும் குறைந்தது. அம்பத்திராயுடு வெளியேற கேப்டன் தோனி வந்தார். 19-வது ஓவர் வரை மேட்ச் ஆர்.சி.பி-க்கு சாதகமான மேட்சாக தான் இருந்தது. கடைசி ஓவரில் ஜடேஜா ருத்ரதாண்டவம் ஆடினார்.

  20-வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசினார். அதில் ஒரு நோபால் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய ஜடேஜா 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஜடேஜா கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். ஜடேஜா 28 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் சென்னை அணி 37 ரன்கள் எடுத்தது.

  இதனையடுத்து ஆர்.சி.பி இன்னிங்ஸை விராட் கோலி, படிக்கல் தொடங்கினர். ஆரம்பம் முதலே படிக்கல் அதிரடி காட்டினார். அவர் அடித்த அடியை பார்த்த போது ஆர்.சி.பி எளிதாக வெற்றி பெறும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் மூன்று ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது ஆர்.சி.பி. நல்ல வேளையாக சாம்கரன் விராட் கோலியை அவுட் செய்து விக்கெட் வேட்டையை தொடங்கினார். அவுட் சைடில் வீசப்பட்ட பந்தை கோலி அடிக்க முயன்று தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். ஷர்துல் தாக்கூர் தனது பங்குக்கு படிக்கலை காலி செய்தார். படிக்கல் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். பவர் ப்ளேயில் ஆர்.சி.பி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது.

  ஜடேஜாவின் மாயாஜாலம்

  ஜடேஜா தனது முதல் ஓவரில் வாஷிங்டன் சுந்தரை அவுட்டாக்கினார். களத்தில் மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் இருவரும் களத்தில் இருந்தனர். இந்த விக்கெட்டுகளை வீழ்த்த வியூகம் வகுத்தனர். இதனையடுத்து தனது இரண்டாவது ஓவரை ஜடேஜா வீச வந்தார். 9-வது ஓவரின் 5 பந்தில் லெக் ஸ்டெம்பை தாக்கி மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரில் கிறிஸ்டியனை தனது அற்புதமான த்ரோவால் ரன் அவுட் செய்தார். ஜடேஜாவுக்கு பந்து நன்றாக திரும்பியதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் தோனி.

  11-வது ஓவரின் முதல்பந்தில் ஆபத்தான பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸை க்ளீன் போல்டாக்கினார். 4 ஓவரை வீசிய ஜடேஜா 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். ஹர்ஷல் பட்டேல், நவ்தீப் சைனி விக்கெட்டுகளை இம்ரான் தாஹீர் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 122 ரன்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  ரன்களுக்கு சுருண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து 4-வது வெற்றியை சென்னை பதிவு செய்தது. கோலி தலைமையிலான ஆர்.சி.பி இந்தத்தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.
  Published by:Ramprasath H
  First published: