• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பந்துவீச்சில் அசத்திய சாஹர், ப்ராவோ - சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பந்துவீச்சில் அசத்திய சாஹர், ப்ராவோ - சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை அணி

சென்னை அணி

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீகரகத்தில் மும்பை மற்றும் சென்னை அணி மோதும் போட்டி நடைபெற்றுவருகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரூத்ராஜின் பொறுப்பான ஆட்டத்தின் காரணமாக ஆட்ட நேரத்தில் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டிகாக் மற்றும் அன்மோல்பீரித் சிங் களமிறங்கினர்.

    தொடக்கத்தில் அதிரடியைக் காட்டிய டிகாக் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உடனே அன்மோல்பீர்த்தும் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா குமார் யாதவ் 3 ரன்களிலும், இஷான் கிஷன் ப்ராவோ பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கைரன் பொல்லார்ட் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஆட்டம் சென்னை அணியின் கைக்கு வந்தது.
    SCHEDULE TIME TABLE:

    ORANGE CAP:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழக்காமல் நீடித்தாலே பெரிது என்ற நிலையிலேயே போட்டியை எதிர்கொண்டனர். மறுபுறம், சவுரப் திவாரி மட்டும் நிதானமாக ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநேர இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் சார்பில் ட்வைன் ப்ராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: