• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs RR | ருதுராஜ் சதம் விளாசல்... சிஎஸ்கே 189 ரன்கள் குவிப்பு

CSK vs RR | ருதுராஜ் சதம் விளாசல்... சிஎஸ்கே 189 ரன்கள் குவிப்பு

ருதுராஜ்

ருதுராஜ்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் ருதுராஜின் அபார சதத்தால் சிஎஸ்கே அணி 189 ரன்கள் குவித்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    சிஎஸ்கே அணி ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டதால் போட்டியின் முடிவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

    சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம் போல் சிறப்பாக விளையாடினார்கள். டூ-பிளெசிஸ் 25 ரன்களில் திவாட்டியா பந்துவீச்சில் அவுட்டாகினார். நீண்ட நாட்களுக்கு பின்னர் சுரேஷ் ரெய்னா 3-வது களமிறங்கினார். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா 3 ரன்னில் அவுட்டாக அவரை தொடர்ந்து வந்த மொயின் அலி 21 ரன்னிலும் அம்பாதி ராயுடு 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் அதிரடியாக விளையாடி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். ருதுராஜ் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்தார்.  இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: