ஐபிஎல் 2021 : டெல்லி அணிக்கு எதிராக சி.எஸ்.கேவில் களமிறங்கும் 11 வீரர்கள் யார்?

ஐபிஎல் 2021 : டெல்லி அணிக்கு எதிராக சி.எஸ்.கேவில் களமிறங்கும் 11 வீரர்கள் யார்?

சிஎஸ்கே

ஐ.பி.எல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோத உள்ளன.

  • Share this:
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான அணி அணுபவம் வாய்ந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியை எதிர்த்து விளையாடுகிறது.

    டெல்லி அணியை பொருத்தவரை கடந்த ஆண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறி முத்திரை பதித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் தொடரிலிருந்து விலகியது சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது இருப்பினும் இளம் கேப்டன் ரிஷப் பந்த் அவருடைய இடத்தை பூர்த்திசெய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சி.எஸ்.கே அணி கடந்த தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடப்பு தொடரில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர்.

    சுழற்பந்துவீச்சு அணி என அழைக்கப்படும் சி.எஸ்.கே வில் ஸ்பின்னர்களுக்கு பஞ்சமே இல்லை, காயத்திலிருந்து மீண்டு வந்த ஜடேஜே, மொயின் அலி, இம்ரான் தாஹிர், புதுவரவு கிருஷ்ணப்பா கௌதம் என அனைவரும் அசுர பலத்தில் உள்ளனர். புஜரா, உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்குவாரா தோனி? என்ற கேள்வியோடு ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

    சென்னை உத்தேச அணி : ருத்துராஜ், டூ-பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பிராவோ, சாம் குர்ரன், சர்துல் தாகூர், தீபக் சாஹர்

    இரு அணிகளும் இதற்கு முன் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
    Published by:Vijay R
    First published: