• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | கொல்கத்தா அணிக்கு மரண அடி தந்த டு பிளெஸ்ஸி... ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே!

CSK vs KKR | கொல்கத்தா அணிக்கு மரண அடி தந்த டு பிளெஸ்ஸி... ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது.

  • Share this:
மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற 15வது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் களத்திற்கு வந்த சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டு பிளெஸிஸ் ஆகிய இருவருமே ஆரம்பத்தில் இருந்தே பட்டைய கிளப்பினர்.

கொல்கத்தா பந்துவீச்சாளர்களால் இவர்கள் இருவரின் ரன் வேட்டையை தடுக்க முடியவில்லை. வருண் சக்கரவர்த்தி வீசிய 13வது ஓவரில் தான் முதல் விக்கெட்டே விழுந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் 4 சிக்ஸர், 6 பவுண்டரி என 42 பந்துகளில் 64 ரன்களை குவித்த நிலையில் கேட்ச்சாகி வெளியேறினார். இருப்பினும் டு பிளெஸி தன் அசுர வேக மட்டை சுழற்றியை தொடர்ந்து கொண்டிருந்தார். இதன் பின்னர் களத்திற்கு வந்த மொயீன் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் சேகரித்தார். சுனில் நரைன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்பிக் செய்யப்பட்டு மொயீன் அலி வெளியேற்றப்பட்ட நிலையில் எம்.எஸ்.தோனி பிளெஸிஸுடன் ஜோடி சேர்ந்தார். இன்றைய போட்டியில் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜடேஜா தான் சந்தித்த ஒரே பந்தில் சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்த உதவினார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்ற டு பிளெஸிஸ் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்


221 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் தீபக் சாஹர். அவரின் முதல் ஓவரிலேயே சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். முதல் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சியளித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். முதல் 5 பேட்ஸ்மேன்கள் யாருமே ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.

நிதிஷ் ரானா 9, சுப்மன் கில் 0, ராகுல் திரிபாதி 8 , கேப்டன் இயான் மோர்கன் 7, சுனில் நரைன் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லை கோட்டுக்கு விரட்டியபடி இருந்தனர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்னட்ஷிப் போட்டனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 11வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதே ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது அரை சதத்தை எட்டினார்.

கொல்கத்தா அணி வெற்றி பெறும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இணையை அடுத்த ஓவரிலேயே பிரித்தார் சாம் கரண். அவர் அரைசதம் அடித்த ஆண்ட்ரே ரஸ்ஸலை போல்டாக்கினார். 22 பந்துகளை மட்டுமே சந்தித்த ரஸ்ஸல் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் பின்னர் தினேஷ் கார்த்திக்கிடம் ஜோடி சேர்ந்த பாட் கம்மின்ஸ் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இருவரும் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசியதால் கொல்கத்தாவின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. ஷர்துல் தாக்கூரின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விரட்டினார் பாட் கம்மின்ஸ். கொல்கத்தாவிற்கு நம்பிக்கை அளித்த இந்த ஜோடியை லுங்கி நிகிடி பிரித்தார். 24 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்திக் 40 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

சாம் கரண் வீசிய 16வது ஓவரில் பாட் கம்மின்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள், மேலும் ஒரு பவுண்டரி, சிக்ஸ் என அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை கொல்கத்தாவுக்காக சேர்த்தார் பாட் கம்மின்ஸ். கொல்கத்தாவின் ரன் ரேட் எகிறினாலும், விக்கெட் வீழ்ந்து கொண்டே இருந்தது. அடுத்ததாக கம்லேஷ் நாகர்கோடி ரன் ஏதும் இன்றி ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி ரன் ஏதும் இன்றி ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதே நேரத்தில் விக்கெட் ஏதும் கைவசம் இல்லை. இருப்பினும் பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்தார். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார்.

பரபரப்பின் உச்சியில் தான் வீசிய முதல் பந்திலேயே நைட் வாட்ச்மேனான கிருஷ்ணாவை டக் அவுட் ஆக்கி சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார் தீபக் சாஹர். இதன் மூலம் சென்னை அணி 3வது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணிக்கு இது 3வது தோல்வியாகும். தற்போது சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: