ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2021 | சென்னை- 2: மும்பை -4: புள்ளிப் பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்த இடம்?

IPL 2021 | சென்னை- 2: மும்பை -4: புள்ளிப் பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்த இடம்?

கோப்புக் காட்சி

கோப்புக் காட்சி

IPL 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.

  இந்தநிலையில், ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் இன்று தொடங்க உள்ளது. முதல் சுற்றில் உள்ள அதே புள்ளிப் பட்டியலுடன் அணிகள் களமிறங்குகின்றன. இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோத உள்ளன. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் தற்போதைய நிலவரப்படி சிஎஸ்கே 2-வது இடத்திலும், மும்பை 4-வது இடத்திலும் உள்ளது.

  இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும்.

  அதே நேரத்தில் போட்டியில் தோல்வியடைந்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். மும்பை அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியும் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிஎஸ்கே, மும்பை அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை அணி தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. மும்பை 19 போட்டிகளிலும், சென்னை 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எப்போதுமே சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் போட்டிகள் என்றாலும் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.

  POINTS TABLE:

  SCHEDULE TIME TABLE:

  ORANGE CAP:

  PURPLE CAP:

  RESULT DATA:

  MOST SIXES:

  குறிப்பாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய வரவேற்பு நிலவும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆரவாரமாக போட்டிகள் தொடங்குவதற்கு மும்பை, சென்னை அணி மோதும் போட்டி என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துஇல்லை.

  Published by:Karthick S
  First published:

  Tags: CSK, IPL 2021, Mumbai