• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Virat Kohli| 140 மேட்ச்கள், 9 சீசன்கள் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை: விராட் கோலி பேட்ஸ்மெனாகவும் சரிவு

IPL 2021 Virat Kohli| 140 மேட்ச்கள், 9 சீசன்கள் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை: விராட் கோலி பேட்ஸ்மெனாகவும் சரிவு

விராட் கோலி

விராட் கோலி

ஒரே உரிமையாளரின் அணிக்கு அதிகப் போட்டிகளை ஆடிய 2வது கேப்டன் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்லாமல் வெறுங்கையுடன் கேப்டனாக தன் முடித்துக் கொண்டது உண்மையில் பலருக்கும் வருத்தமளிக்கக் கூடியதே.

  • Share this:
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று எலிமினேட்டர் 2- சுற்றில் ஆர்சிபி தோற்று வெளியேறியது. இதுதான் கோலி கேப்டனாக ஆடும் கடைசி போட்டி. 2020-ல் எலிமினேட்டர் சுற்று வரை வாய்ப்பு கிடைத்த போதும் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. கோலி தனது கேப்டன்சியை ராஜினாமா செய்வதற்குக் காரணம் பணிச்சுமை என்று கூறப்பட்டாலும், பேட்டிங் பார்மை மீட்டு பழைய கோலியாக வேண்டும் என்று அவரே கூறினாலும் காரணங்களை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.

    2011-ல் டேனியல் வெட்டோரி இல்லாததால் வைஸ் கேப்டனான விராட் கோலி ஆர்சிபி கேப்டன்சியைப் பெற்ற விராட் கோலி 10 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை. இந்திய கேப்டனாகவும் ஐசிசி கோப்பையை இதுவரை வெல்லவில்லை. ஆனால் அதற்கெல்லாம் கோலியை மட்டுமே பிரதான காரணமாகக்கூறுவது அபத்தம். ஏனெனில் நிறைய காரணிகள் உள்ளன, இவரிடமிருந்து தவறைச் சுட்ட முடியும் என்றால் அணியில் எந்த ஒரு வீரரையும் செட்டில் ஆகவிடாமல் வெட்டுவதும் ஒட்டுவதுமாக செய்து வந்தார், தோனி கேப்டன்சி சக்சசே சிஎஸ்கேவைப் பார்த்தால் தெரியும், ராயுடு, ரெய்னா, பிராவோ, டுபிளெசிஸ், ஜடேஜா என்று எவ்வளவு வாய்ப்புகள், அதன் பிறகு இப்போதுதான் ரெய்னா உட்கார வைக்கப்படுகிறார்.



    2011 ஐபிஎல் தொடரில் ரன்னர்களாக முடிந்தனர். சிஎஸ்கேவிடம் இறுதியில் தோல்வி. வெட்டோரி ஓய்வு அறிவித்தவுடன் 2013-ல் முழு நேர கேப்டன் ஆனார் விராட் கோலி. அந்த ஆண்டு ஆர்சிபி 5ம் இடத்தில் முடிந்தது. 2014-ல் 7ம் இடம். 2018-ல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 3ம் இடத்தில் முடிந்தது ஆர்சிபி. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தினாலும் குவாலிபையர் 2-ல் சிஎஸ்கேவிடம் சரணடைந்தது. 2016-ல் கோலி தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் பைனலில் நுழைந்தது, ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி கண்டது, ரன்னர்களாக ஆர்சிபி முடிந்தது.

    அதன் பிறகு 207, 18, 19 ஆர்சிபிக்கு மோசமான சீசன்களாக அமைந்தது. இந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் முறையே 8,6,8 என்ற இடங்களில் முடிந்தனர். இது ரொம்ப மோசம், 2017 தொடரில் 3 போட்டிகளில்தான் வென்றனர்.



    ஆனால் பேட்டராக கோலி பிரமாதம்தான் , டச் செய்ய முடியாது, 2011 சீசனில் 557 ரன்களை 46 என்ற சராசரியுடன் 121 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெளுத்து வாங்கினார். 2012-ல் 364 ரன்களைத்தான் எடுத்தார் கோலி. 2013-ல் முழு நேர கேப்டனாக 634 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 139. 2014 தொடரில் மறுபடியும் வீழ்ச்சி 359 ரன்களைத்தான் எடுத்தார். 2015-ல் 505 ரன்கள், 2016 அபார சீசன், 973 ரன்களை 152 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 81 என்ற சராசரியில் வெளுத்துக் கட்டினார். 4 சதங்கள், 7 அரைசதங்கள் இதுதான் அவரது சிறந்த சீசன் அதன் பிறகு 530, 405 என்று சரிவு காணத் தொடங்கினார்.

    மொத்தமாக 140 போட்டிகளில் ஆர்சிபி கேப்டனாக இருந்த கோலி, 64 போட்டிகளில் வென்று 69-ல் தோற்றுள்ளார், தோல்விதான் அதிகம். 3 போட்டிகள் டை ஆகியுள்ளது. தோனிதான் 200 போட்டிகளில் கேப்டன்சியில் 100 போட்டிகளுக்கு மேல் வென்ற ஒரே கேப்டன். கவுதம் கம்பீர் 129 போட்டிகளில் 71 வெற்றி, ரோகித் சர்மா 129 போட்டிகளில் 75 வெற்றி. 5 ஐபிஎல் கோப்பைகள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: