• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மும்பை பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம்: ஹாட்ரிக் எடுத்த ஹர்ஷல் படேல்- பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

மும்பை பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம்: ஹாட்ரிக் எடுத்த ஹர்ஷல் படேல்- பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

பெங்களூரு வீரர்கள்

பெங்களூரு வீரர்கள்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 39-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மறுபுறம் கோலி நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.

    கோலி, பரத், மேக்ஸ்வெல், ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்த நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களைக் குவித்தது. மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

    மும்பை அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிகாக் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா 43 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா என வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்ஷல் பட்டேல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மும்பை அணியை முற்றிலுமாக சரித்துவிட்டார்.

    ஐ.பி.எல் அணிகளில் மிக வலிமையான அணியாகப் பார்க்கப்பட்ட மும்பை அணி 18.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், சாஹல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஐ.பி.எல் இரண்டாவது சுற்றில் தொடர்ந்து இரண்டு தோல்வியைச் சந்தித்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இந்த வெற்றி உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்தது. மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது மும்பை ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: