ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் பற்றி தற்போது திட்டம் இல்லை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் பற்றி தற்போது திட்டம் இல்லை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் தொடரில் கிறிஸ் லின்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்களை சொந்த நாடு அழைத்துவருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மீண்டும் நாடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்வது குறித்து இப்போதைக்கு எந்த திட்டமும் கிடையாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் தங்கவைக்கப்பட்டு தொடர் நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் ஏற்பட்டு வருவதாலும் ஐபிஎல் தொடரில் கலந்துகொண்டிருக்கும் வெளிநாட்டு வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகி சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டு வரும் பாதிப்பின் காரணமாக இந்தியாவுடனான விமான சேவையை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளதுடன், இந்தியாவிலிருந்து எந்த நாட்டின் வழியாகவும் 14 நாட்களுக்குள் ஆஸ்திரேலியா திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகளவிலான அபராதமும் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி.. கலக்கத்தில் வீரர்கள்...


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின், ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு ஆஸி கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இது குறித்து ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்களை சொந்த நாடு அழைத்துவருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

உங்கள் கைகளில் ரத்தம்': ஆஸ்திரேலிய பிரதமரை சாடிய கிரிக்கெட் வர்ணணையாளர்!


இந்தியாவில் ஐபிஎல் வீரர்களுக்காக பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக உணருகின்றனர். நாங்கள் ஆஸ்திரேலிய வீர்களுடனும், இந்திய கிரிக்கெட் வாரியத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். வீரர்கள் அங்கு பாதுகாப்புடன் இருப்பதை உறுதிசெய்துள்ளோம். வீரர்கள் நல்ல உத்வேகத்துடன் இருந்து வருகின்றனர். அவர்கள் மே 30ம் தேதி வரை ஐபிஎல் தொடரை நிறைவு செய்துவிட்டு திரும்பவதில் உறுதியாக இருப்பதாக நிக் தெரிவித்தார்.

இன்று கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப்புக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதே போல சென்னை அணியின் சிஇஓ, பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகும் முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி இதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: