ஐபிஎல் ஏலம் என்றால் என்ன & அது எப்படி நடக்கிறது என்று தெரியுமா?

ஐபிஎல் ஏலம் என்றால் என்ன & அது எப்படி நடக்கிறது என்று தெரியுமா?

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஆட்டத்தைப் பொறுத்துவரை, ஒரு அணியை உருவாக்க அதன் உரிமையாளர் ரூ. 80 கோடியை கொண்டிருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் அந்த உரிமையாளர் அணிக்காக செலவிட வேண்டிய அவசியமில்லை.

  • Share this:
உலகின் மிகப்பெரிய T20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் பலரால் விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டாகும். ஐபிஎல்-க்கு வெறித்தனமான ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்-ஐ உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் முதலில் ஏலத்தின் மூலம் தொடங்குகிறது. இங்கு ஏலம் எதற்காக என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருக்கும் 8 உரிமையாளர்களும், ஏலத்தில் வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டின் மூலம் வீரர்களை தங்கள் அணிக்கு எடுத்துக்கொள்ள ஏலம் நடக்கிறது.

இது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஏலம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் நிகழ்வாகும். IPLன் உரிமையாளர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச வீரர்களைப் பெறுவதற்கு ஏலம் நடத்துகின்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து, ஏலம் என்பது போட்டியின் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும், ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பல மில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள். இந்திய பிரீமியர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் எட்டு உரிமையாளர்களுக்கு பல்வேறு மற்றும் மாறுபட்ட கிரிக்கெட் வீரர்களை ஏலத்தின் மூலம் IPL அணிகள் எடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதை கண்காணித்து வழிநடுத்துகிறது. IPLலில் ஈடுபடும் வீரர்களின் லைசன்ஸ்கள் உட்பட பலவற்றை ஐபிஎல் ஏலத்தில் ஈடுபடும் அணிகள் பாதுகாக்கின்றன.

ஐபிஎல் ஏலம் எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

பி.சி.சி.ஐ ஆண்டுதோறும் ஐ.பி.எல் ஏலத்தை நடத்துகிறது. IPLன் எட்டு உரிமையாளர்கள் அவர்கள் விரும்பும் வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பட்ஜெட் வழங்கப்படுகிறது, மேலும் நிர்ணயிக்கப்பட்ட பணத்திற்குள், வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் பேஸ் பிரைஸ் எனப்படும் அடிப்படை விலை உள்ளது. அந்த அடிப்படை விலையில் இருந்து தொடங்கும் ஏலத்தில் அதிக விலையைக் கோரும் எந்தவொரு அணிக்கும் அந்த வீரர் தேர்வாவார்.

IPL 2021 ஏலம்:


போட்டிகள் டிவியில் ஒளிபரப்பப்படுவதால், ஒவ்வொரு அணியின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் வீரருக்காக விவாதித்து ஏலம் விடுகிறார்கள். குறிப்பிட்ட வீரரை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் வைத்திருக்க விரும்பும்போது ஏலம் தொடங்கி சூடுபிடிக்கிறது. அதிக ஏலத்தை எந்தவொரு அணி எடுக்கத் தவறுகிறதோ, அந்த வீரர் ஏலத்தை எடுக்கும் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அதுவே, ஒரு வீரரை யாருமே ஏலத்தில் கேட்காவிட்டால், அவர் ஏலமெடுக்காதவர் பட்டியலில் சேருகிறார்.

எல்லா வீரர்களும் ஏலத்தில் எடுத்து முடிக்கப்பட்டவுடன் ஏலம் எடுக்கப்படாத வீரர்களின் பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது சுற்றில் அவர்கள் அணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். ஐ.பி.எல். இல் விளையாடும் வீரர்களின் இறுதி பட்டியல் ஐ.பி.எல் ஏலம் நடத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகும்.

பல்வேறு உரிமையாளர்கள் தங்கள் அணிக்கு யார் வரவேண்டுமென்று திட்டமிட்டு காயை நகர்த்துவார்கள் மேலும் வீரர்களின் திறமை, அவர்கள் வைத்திருக்கும் ஸ்கோர் பாய்ண்ட்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்டு ஏலத்தில் முன்னுரிமை கிடைக்கும். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது தேசிய வீரர்கள் மட்டுமல்ல உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தான். உள்நாட்டு வீரர்கள் பல கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்று பல சாதனைகளைப் புரிந்திருப்பர். அவர்களுக்கும் IPLல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. IPL உண்மையில் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது.ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பட்ஜெட் உள்ளது?

ஐபிஎல் ஆட்டத்தைப் பொறுத்துவரை, ஒரு அணியை உருவாக்க அதன் உரிமையாளர் ரூ. 80 கோடியை கொண்டிருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் அந்த உரிமையாளர் அணிக்காக செலவிட வேண்டிய அவசியமில்லை. எனினும், 75 சதவீத தொகை அதாவது ரூ. 60 கோடி வரை அவர் செலவிட வேண்டும் என புதிய ஐபிஎல் விதிகள் கூறுகின்றன. ஒரு உரிமையாளர் 80 கோடி ரூபாய் செலவிடலாம் என்றிருக்கும் நிலையில், சிஎஸ்கே ரூ. 79.85 கோடியை தனது வீரர்களின் ஊதியத்துக்காக செலவிட்டு, வெறும் 15 லட்சம் ரூபாயை மட்டுமே கையிருப்பாக வைத்தது. ஒவ்வொரு முகவர் அணி உரிமையாளரும் தங்களுடைய வீரர்களின் செயல்திறனுக்கான உத்தியை கொண்டிருப்பார்கள். தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வீரர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை அந்த முகவர் விரும்புகிறார். இதன் மூலம் சரியான நேரத்தில் பணத்தை சேமிக்க வீரர்களின் ஒத்துழைப்பு அந்த முகவர் உரிமையாளருக்கு அவசியமாகிறது.

ஐ.பி.எல் 2021 ஏலம்:

ஐபிஎல் 2021 ஏலம் பிப்ரவரி 18, 2021 அதாவது இன்று சென்னையில் நடக்கிறது. அணியின் உரிமையாளர்கள் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலையும், அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் ஜனவரி 21, 2021 அன்று சம்மந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பித்தனர். இந்த ஆண்டு, மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்கு தங்கள் பெயர்களை அனுப்பியுள்ளனர். அதில் 164 வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும் 125 பேர் வெளிநாட்டவர்களாகவும், அசோசியேட் நேஷனிலிருந்து 3 வீரர்கள் என மொத்தம் 292 வீரர்களை பிசிசிஐ இறுதி பட்டியலுக்கு தேர்வுசெய்துள்ளது. இந்த ஏலமானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது
Published by:Arun
First published: