HOME»NEWS»SPORTS»ipl ipl 2021 auctions the 10 most expensive buys in ipl auction history aru ghta

IPL Auction 2021: இதுவரை மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஐபிஎல் முதன்மையாக விளங்குகிறது. சுமார் 60 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் விளையாட பல நாட்டின் வீரர்களும் விரும்புகிறார்கள். எனவே இன்று நடைபெறும் ஏலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

IPL Auction 2021: இதுவரை மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?
IPL 2021 ஏலம்:
  • Share this:

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14வது சீசன் ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மெகா போட்டிக்கு முன்னதாக, பெரிய அளவிலான ஏலம் இன்று (பிப்ரவரி 18) சென்னையில் நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக ஏலத்தில் சில பெரிய பர்ச்சேஸ்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சில எதிர்பார்க்கப்பட்டவையும் சில ஆச்சரியங்களும் இருந்தன. இதுவரை IPL ஏல வரலாற்றில் மிக அதிக விலையுயர்ந்த 10 பர்ச்சேஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போமா.

1. யுவராஜ் சிங் - ₹16 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்) 2015

யுவராஜ் சிங் 2015 ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்தால் ரூ .15 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், யுவராஜ் சிங்கிற்கு இது ஒரு சிறந்த சீசனாக இல்லை. அந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய யுவராஜ், வெறும் 248 ரன்களையும் 19.07 சராசரியையும், 118.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டு அரைசதங்களையும் பெற்றார்.



2. பாட் கம்மின்ஸ் - 2020ல் ₹15.5 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

சிறந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பென் ஸ்டோக்கின் சாதனையை முறியடித்ததால் ஐபிஎல் ஏல வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ .15.5 கோடிக்கு வாங்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இவரையே சாரும்.

3. பென் ஸ்டோக்ஸ் - 2017ல் ₹14.5 கோடி (ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்)

ஐபிஎல் ஏல வரலாற்றில் பென் ஸ்டோக்ஸ் 2017ம் ஆண்டில் ரூ .14.5 கோடிக்கு புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டபோது மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக இருந்தார். ஸ்டோக்ஸ் தன்னிடம் பேட்டும்-பாலும் இருந்தால் பல மேஜிக்குகளை செய்வார். உலகின் முதன்மையான ஆல்ரவுண்டராகவும் பலரால் இவர் அறியப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் பாட் கம்மின்ஸ் தனது சாதனையை முறியடிக்கும் வரை அவர் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீராக IPL அணிகள் பார்த்தது.

4. யுவராஜ் சிங் - ₹14 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) 2014

2007 உலக T20 மற்றும் 2011 உலகக் கோப்பை - உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் இரண்டு வரலாற்று வெற்றிகளில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு முக்கியமானது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அவரை 14 கோடி ரூபாய்க்கு (ஐபிஎல் ஏல வரலாற்றில் மிக உயர்ந்த விலை) வாங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

5. பென் ஸ்டோக்ஸ் - 2018 இல் ₹12.5 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

யுவராஜ் சிங் போன்றே ஸ்டோக்ஸும், ஐபிஎல் ஏலத்தில் இரண்டாவது பெரிய தொகையை கொண்டிருந்தார். அப்போது 2018 சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸிடமிருந்து ஸ்டோக்ஸ் இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டார், அதற்குள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆல்ரவுண்டர் என்ற தனது நிலையை முத்திரையிட்டார்.

6. தினேஷ் கார்த்திக் - ₹12.5 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்) 2014

ஐபிஎல் 2013 எடிஷனில் தினேஷ் கார்த்திக் 19 போட்டிகளில் 510 ரன்கள் எடுத்திருந்தார். 2014 ம் ஆண்டு எடுக்கப்பட்ட அடுத்த ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கு அட்டகாசமான ஏலம் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இறுதியாக டேர்டெவில்ஸ் அவரை ரூ .12.5 கோடிக்கு வாங்கியது.

7. ஜெய்தேவ் உனட்கட் - 2018 இல் ₹11.5 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ஜெய்தேவ் உனட்கட் 2017 சீசனில் 12 போட்டிகளில் 13.41 சராசரியாகவும், ஸ்ட்ரைக் ரேட் 11.45 ஆகவும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு அற்புதமான நிலையில் இருந்தார். ஜெய்தேவ் ஒரு ஓவருக்கு வெறும் 7.02 ரன்கள் மட்டுமே எடுப்பதில் உறுதியாக இருந்தார். 2018ம் ஆண்டு ஏல உரிமையாளர்களிடையே பிடித்தவராக இருந்த அவர், இறுதியாக ராயல்ஸுக்கு ரூ.11.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

8. கவுதம் கம்பீர் - 2011 இல் ₹11.4 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

இந்திய மற்றும் சர்வதேச ஆட்டங்களில் கவுதம் கம்பீர் சிறந்த தொடக்க ஆட்டக்கார்களில் முக்கியமானவராக இருந்தார், முந்தைய ஐபிஎல் சீசனில் கிட்டத்தட்ட 31 சராசரியையும் 277 ரன்களையும் இவர் எடுத்திருந்தார். 2011 ஆம் ஆண்டில் KKRக்கு கம்பீர் ஒரு நல்ல ஸ்கோர்களை கொடுத்தார். 15 போட்டிகளில் 378 ரன்களைச் சேகரித்து அணிக்கு வலு சேர்த்தார்.

9. கே.எல்.ராகுல் - ₹11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) 2018

2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 11 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. இதன் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ரன்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.

10. கிளென் மேக்ஸ்வெல் - 2020 இல் ₹10.75 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

கிளென் மேக்ஸ்வெல் 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அந்த அணி அவரை 10.75 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஆனால், அத்தனை விலை கொடுத்து வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடி ஆல்-ரவுண்டரான அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அதனால் அவர் கடும் விமர்சனத்தை சந்தித்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் கூட அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டு முதல் போட்டியில் பங்கேற்றார்.

உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஐபிஎல் முதன்மையாக விளங்குகிறது. சுமார் 60 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் விளையாட பல நாட்டின் வீரர்களும் விரும்புகிறார்கள். எனவே இன்று நடைபெறும் ஏலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Published by:Arun
First published: