• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சூதாட்டப் புகாரில் தண்டனை பெற்று திரும்பிய ஸ்ரீசாந்த் ஆகியோர் பதிவு!

ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சூதாட்டப் புகாரில் தண்டனை பெற்று திரும்பிய ஸ்ரீசாந்த் ஆகியோர் பதிவு!

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன்

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன்

ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ள அர்ஜூன் டெண்டுல்கரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்த மாதத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சூதாட்டப் புகாரில் தண்டனை பெற்று மீண்டும் திரும்பியிருக்கும் ஸ்ரீசாந்த் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலமானது சென்னையில் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 21 வயது மகன் அர்ஜூனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ள அர்ஜூன் டெண்டுல்கரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன்


கடந்த மாதம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அர்ஜூன் அறிமுக வீரராக களம் இறங்கினார். இவர் இடது கை பேட்ஸ்மேனாகவும், மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார். அறிமுக போட்டியிலேயே 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் அர்ஜூன். இந்த போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே போல தனது 2வது போட்டியில் பாண்டிச்சேரியுடன் விளையாடிய அர்ஜூன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

கடந்த வியாழனுடன் ஐபிஎல் ஏலத்திற்கான பதிவு நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 814 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்களும், 283 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் உள்ளனர். மொத்தம் 61 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்பதால் யார் யார் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என பரபரப்புடன் எதிர்நோக்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்தும் (வயது 37) தனது பெயரை பதிவு செய்துள்ளார், இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும். 2013ல் ஐபிஎல் தொடரில் புயலை கிளப்பிய ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்ட புகாரில் சிக்கி கைதான ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டவர். தடை காலம் முடிந்து தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.

ஸ்ரீசாந்த்


இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஃபின்ச் ஆகியோர் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர். அதே நிலையில் மிட்செல் ஸ்டார்க் (ஆஸி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: