• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வின் செயல் கிரிக்கெட்டுக்கே இழுக்கானது... அவமானம்: ஷேன் வார்ன் பாய்ச்சல்

அஸ்வின் செயல் கிரிக்கெட்டுக்கே இழுக்கானது... அவமானம்: ஷேன் வார்ன் பாய்ச்சல்

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

அஸ்வின் தொடர்ந்து கெட்டபெயர் சம்பாதித்து வருகிறார், மன்கடிங் அவுட்டின் போது எச்சரிக்காமலேயே அவுட் செய்து விட்டு அதை நியாயப்படுத்தி கல்லி கிரிக்கெட் வாதங்களை முன் வைத்தார், அன்று ரிஷப் பந்த் மேல் பட்டுச் சென்ற த்ரோவுக்கு கூடுதல் ரன் எடுத்தார்,

  • Share this:
    இது சர்ச்சையாக முதலில் டிம் சவுதி இதை எதிர்த்தார், பிறகு இயான் மோர்கனும் அஸ்வினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தினேஷ் கார்த்திக் இருவரையும் விலக்கி விட்டு சமாதானப் புறாவானார், இந்த விவகாரத்தில் மோர்கனுடன் அஸ்வின் வாக்குவாதம் புரிந்தது இழுக்கான செயல், அவமானத்துக்குரிய செயல் என்று ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் அஸ்வினை சாடியுள்ளார்.

    ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஒரு கட்டத்தில் ரன் அடிக்க முடியாமல் திணறியது டெல்லி அப்போதுதான் அஸ்வின் இந்த மாதிரி ஒருரன்னை எடுக்க ரிஷப் பந்த்தை அழைத்தார். பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

    மரபை சிலர் மதிப்பார்கள் பலர் மதிப்பதேயில்லை. இந்நிலையில் ஷேன் வார்ன், அஸ்வினுக்கு தன் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார், “இந்தத் விவகாரத்தாலும், அஸ்வின் செயலினால் கருத்து தெரிவிப்பவர்கள் இடையே மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது, அஸ்வின் செயல் கண்டிக்கத்தகக்து. சுருக்கமாகச் சொல்வதென்றால், அஸ்வின் செயல் அவமானம், இதுபோல் ஒருபோதும் நடக்கக்கூடாது. ஏன் அஸ்வின்மீண்டும் சர்ச்சையில் சிக்குபவராகவே இருக்கிறார்? மோர்கனுக்கு அஸ்வின் மீது குற்றம்சாட்ட எல்லா விதத்திலும் உரிமை உள்ளது” என்றார்.

    ஆனால் உலகக்கோப்பையை மோர்கன் வென்றதே த்ரோ ஒன்று பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரி ஆனதால்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது. மோர்கன் என்ன கோப்பையை வாங்க மாட்டேன் என்று அடம் பிடித்தாரா என்ற கேள்விகள் பலருக்கும் எழுவது நியாயம்தானே!!

    Also Read: அஸ்வின் - மோர்கன் இடையே என்ன பிரச்சனை?- மவுனம் கலைத்த   தினேஷ் கார்த்திக்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: