IPL 2021 | தோனியை விடவும் சிறந்த வீரர் ரிஷப் பந்த், தனிநபராக இவரால் வெல்ல முடியும்: பார்த்திவ் படேல் புகழாரம்

IPL 2021 | தோனியை விடவும் சிறந்த வீரர் ரிஷப் பந்த், தனிநபராக இவரால் வெல்ல முடியும்: பார்த்திவ் படேல் புகழாரம்

வெற்றி இந்திய அணி. ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த் வந்து 20 டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்குள்ளாகவே ஒரு பெரிய மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். இதனையடுத்து ரிஷப் பந்த், நிச்சயம் தோனியை விட சிறந்த வீரர்தான் என்று பார்த்திவ்ப் படேல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ரிஷப் பந்த் வந்து 20 டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்குள்ளாகவே ஒரு பெரிய மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். இதனையடுத்து ரிஷப் பந்த், நிச்சயம் தோனியை விட சிறந்த வீரர்தான் என்று பார்த்திவ்ப் படேல் தெரிவித்துள்ளார்.

  தோனி நமக்குத் தெரிந்தவரையில் டெஸ்ட் மேட்சில் எல்லாம் சூரப்புலியெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு நாள், டி20 புலி, டெஸ்ட்டில் பூனையாகவே அவர் இருந்துள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் அடித்த 224 ரன்கள் தவிர மேட்ச் வின்னிங் சதம் ஏதாவது அவர் பெயரில் டெஸ்ட் போட்டிகளில் இருக்கிறதா என்று சல்லடைப் போட்டுத்தான் தேட வேண்டும்.

  வெளிநாடுகளில் 14 போட்டிகளில் தோல்வியடைந்தது தோனி கேப்டன்சியில் இந்திய அணியின் தோல்வி மட்டுமல்ல, அவரது சொந்த பேட்டிங் சொதப்பலும்தான். அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் கேப்டன் ஆனார். நல்ல அணி கைக்கொடுத்தது உள்நாட்டில் வெற்றிகளைக் குவித்தார். நல்ல விக்கெட் கீப்பிங் செய்தார், அதில் கடைசி வரை சோடை போனதில்லை தோனி.

  இந்நிலையில் ரிஷப் பந்த் குறித்து பார்த்திவ் படேல் கூறியதாவது:

  ரிஷப் பந்த் அதிக தன்னம்பிக்கை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். டி20 போட்டி விளையாடும்போது அந்த தன்னம்பிக்கைதான் உங்களுக்குத் தேவை. எந்தவிதமான சந்தேகமும் உங்கள் மனதில் வரக்கூடாது. அதாவது ரிஷப் பந்த் தெளிவாக இருக்க வேண்டும்.

  தோனியுடன் அடிக்கடி ரிஷப் பந்த்தை ஒப்பிட்டுப் பலரும் பேசினார்கள். இந்த வார்த்தையின் சுமையை ரிஷப் பந்த் அதிகம் உணர்ந்திருப்பார். தோனியைப் போல் செயல்படுவோமோ என்று நினைத்து அதைப் போல் செயல்படவும் முயன்றிருப்பார்.

  ஆனால், ரிஷப் பந்த் புத்திசாலியான வீரர். தோனி போன்று ஆக வேண்டும், தோனியைப் போல் விளையாட வேண்டும் என்பதைப் பற்றி ரிஷப் பந்த் கவலைப்படவில்லை. தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பந்த். அவரால் தன் சொந்த திறமையிலேயே தனிநபராக போட்டிகளை வெல்ல முடிந்திருக்கிறது, அதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஆதலால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சிறந்த கேப்டனாக ரிஷப் பந்த் இருப்பார்.

  அடுத்து எங்கு விளையாடப் போகிறோமோ என்றெல்லாம் மும்பை இந்தியன்ஸ் கவலைப்படுவார்கள் என்று நினைக்கவில்லை. அனைத்து அணிகளும் நாம் எங்கு விளையாடப் போகிறோம் என்று யோசித்திருக்கலாம். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணி, தங்களின் சிறந்த 11 வீரர்களுடன் களத்துக்கு வருவார்கள்.

  சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மந்தமானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானது. ஆதலால், அதற்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெரிய அளவில் வீரர்களை மும்பை அணி மாற்றாது. ஹர்திக் பாண்டியா, பொலார்ட் போன்றோர் சற்று குறைந்த வேகத்தில்தான் பந்துவீசக்கூடியவர்கள். அது சென்னை ஆடுகளத்துக்கு உதவியாக இருக்கும். ராகுல் சாஹர், குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துருப்புச் சீட்டாக அமையும்.

  மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாகத் தொடங்கி பிறகு சரியான நேரத்தில் உச்சம் தொட்டு அருமையாக முடிக்கும் அணி. கடைசியில் 5 போட்டிகளில் ஐந்தையும் வெல்ல வேண்டுமென்றாலும் மும்பை அதை வெல்வதற்கான பலம் கொண்ட அணிதான்.

  இவ்வாறு பர்தீவ் படேல் தெரிவித்தார். ஐபிஎல் 2021 போட்டிகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது, ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் போட்டியில் மோதுகின்றன.
  Published by:Muthukumar
  First published: