• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021- ‘டோன்ட் பவுல்’ என்று கூறும் ஏ.பி.டிவிலியர்ஸ் அதிரடி- 46 பந்துகளில் 104 ரன்கள் விளாசல்

IPL 2021- ‘டோன்ட் பவுல்’ என்று கூறும் ஏ.பி.டிவிலியர்ஸ் அதிரடி- 46 பந்துகளில் 104 ரன்கள் விளாசல்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஐபிஎல் 2021-ன் 2வது சுற்று ஆட்டங்கள் எமிரேட்ஸில் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனையடுத்து ஐபிஎல் அணிகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் அணிக்குள்ளேயே அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன, இதில்தான் ஏ.பி.டிவிலியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களை விளாசித்தள்ளினார்.

  • Share this:
    ஐபிஎல் 2021-ன் 2வது சுற்று ஆட்டங்கள் எமிரேட்ஸில் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனையடுத்து ஐபிஎல் அணிகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் அணிக்குள்ளேயே அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன, இதில்தான் ஏ.பி.டிவிலியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களை விளாசித்தள்ளினார்.

    ஆர்சிபி ஏ அணிக்கு ஹர்ஷல் படேல் தலைமை, ஆர்சிபி அணிக்கு தேவ்தத் படிக்கல் தலைமை. ஏனெனில் விராட் கோலி, முகமட் சிராஜ் இருவரும் இங்கிலாந்திலிருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை எப்படியாவது கப் எடுத்த வேண்டும் என்பதே கோப்பைகள் காணாத விராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸின் குறிக்கோளாக இருக்க முடியும்.

    ஹர்ஷல் படேல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். முடிவு சரியானதாக 212 ரன்களை வெறும் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்தது இவரது அணி. டிவிலியர்ஸ் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இவர் சதம் அடிக்கும்போது ஹர்ஷல் படேல் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இவருடன் மொகமட் அசாருதின் 43 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

    கே.எஸ். பரத் இவர் ஐபிஎல் 2021-ல் தான் ஏலம் மூலம் அணிக்குள் வந்தார். டிவிலியர்ஸ் இன்னிங்ஸை முறியடிக்குமாறு ஆடி 47 பந்துகளில் 95 ரன்கள் விளாசி படிக்கல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தினார். கேப்டன் படிக்கல்லும் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து கே.எஸ். பரத் பிளேயிங் லெவனுக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read: இந்த 3 ஐபிஎல் சாதனைகளை யாராவது உடைக்க முடியுமா?

    ஆர்சிபி அணி யுஏஇ சுற்றில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை செப்.20ம் தேதி சந்திக்கிறது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை செப்டம்பர் 24ம் தேதியும் மும்பை இந்தியன்ஸை செப்.26ம் தேதியும், ராஜஸ்தான் ராயல்சை செப்.29ம் தேதியும் பஞ்சாப் அணியை அக்டோபர் 3ம் தேதியும். ஹைதராபாத் அணியை அக்டோபர் 6ம் தேதியும் எதிர்கொள்கிறது ஆர்சிபி. புள்ளிகள் அட்டவணையில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது ஆர்சிபி.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: