ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் 2021: ரசிகர்களுக்கு ரோகித் சர்மாவின் உருக்கமான ‘மெசேஜ்’

ஐபிஎல் 2021: ரசிகர்களுக்கு ரோகித் சர்மாவின் உருக்கமான ‘மெசேஜ்’

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய கடந்த சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை சமூக ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய கடந்த சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை சமூக ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ கொலாஜ் ஒன்றை வெளியிட்டு அதில் ரோகித் சர்மா கூறும்போது, “சீசன் முழுதும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்தன. கற்றுக்கொள்ளல்களும் இருந்தன. ஆனால் கடந்த 2-3 சீசன்களில் இந்த அணி சாதித்ததை இந்த 14 போட்டிகள் அபகரித்து விட முடியாது. நீலமும் பொன்னிறத்தையும் தரித்த ஒவ்வொரு வீரரும் பெருமையுடன் ஆடி அவர்களின் சிறந்த பங்களிப்பைச் செய்தனர். இதுதான் நாங்கள் ஒரு அணியாக இருப்பதை உறுதி செய்கிறது. நாங்களெல்லாம் ஒரே குடும்பம்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: மும்பை இந்தியன்ஸில் நீடிப்பாரா ரோகித் சர்மா?- ‘பிரஷர்’ குறித்து சூசகம்

பிளே ஆஃபை நெட் ரன் ரேட்டில் விட்டது மும்பை இண்டியன்ஸ், கடைசி லீக் போட்டியில் 235 ரன்களை சன் ரைசர்ஸ் போட்டுக்கொடுத்தாலும் விட்டுக்கொடுக்கவில்லை இதனால் நெட் ரன் ரேட்டில் மும்பை வெளியேறியது. கடைசி லீக் போட்டியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 விளாச சூரியக்குமார் யாதவும் 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களும் மும்பை வெற்றி பெறுமோ என்ற ஆசையை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அந்தப் பிட்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மும்பை தகுதி பெற்றிருந்தால் அது கிரிக்கெட்டாக இருந்திருக்க முடியாது, சன் ரைசர்ஸும் ஸ்பிரிட்டட் சேசிங் செய்து 192 ரன்களை எடுத்தது. அக்டோபர் 15ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது 2 பிளே ஆஃப் போட்டிகள் முடிந்ததும் தெரியும்.

First published:

Tags: IPL 2021, Rohit sharma